40
சிலம்பொலி
எந்த ஒரு அணியையும், கோவலன் உறவு கொள்வதன் முன்னர், மாதவி பெற்றிருக்கவில்லை; அவை அனைத்தும் கோவலன் கொடுத்தனவே. இவ்வாறு மாதவிக்குக் கொடுத்துக் கொடுத்தே, கோவலன் வறியனாகி விட்டான் என்பது அவர் கருத்தாதல் தெரிகிறது.
ஆனால், அரங்கேற்றுக் காதையும், அந்திமாலைச் சிறப்புச் செய் காதையும் காட்டும் மாதவிக் காட்சி, தெ.பொ.மீ. கூற்றுக்கு அரண் செய்வதாக இல்லை.
அரங்கேறுவதற்கு முன்னர், தன் மூல மரபுப்படி மாதவி வழிபட்ட தலைக்கோல், கணுக்கள் தோறும் நவமணிகள் இழைக்கப்பட்டு, இடைப்பகுதி சாம்பூநதம் என்னும் பொன் தகடால் கட்டப்பட்டது எனக் கூறுகிறது அரங்கேற்றுக் காதை, “கண்ணிடை நவமணி ஒழுக்கி, மண்ணிய நாவலம் பொலந் தகட்டு இடைநிலம் போக்கி” [116-117] என்ற வரிகளைக் காண்க. மேலும் அதே அரங்கேற்றுக் காதையில், ஆடி முடித்து நின்ற மாதவியைக் கூறுங்கால், ஆடி அடங்கி நின்ற பொன்னால் பண்ணப்பட்ட ஒரு பூங்கொடியாகக் காட்டியுள்ளார் ஆசிரியர். “பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள்” [157-159] என்ற வரிகளைக் காண்க. ஆக, அவள் தலைக் கோல் அமைப்பும், பொற்கொடி ஆடி நின்றாற். போலும் அவள் தோற்றமும், கோவலன் உறவு கொள்வதற்கு முன்பே, மாதவி செல்வச் செழிப்பில் வாழ்ந்தவள் என்பதை உறுதி செய்கின்றன. -
அது மட்டுமன்று. கோவலன் ஊடல் தணிக்க மாதவி கடைசியாகக் கொண்ட கோலத்தையும், மாலை வாங்கித் தன் மனை புகுந்த கோவலனுக்குத் தன் மனையகத்து நிலவுப் பயன் கொள்ளும் நிலா முற்றத்தில் முதன் முதலாகக் கலவியும், புலவியும் அளித்த போது கொண்ட