பக்கம்:சிலம்பொலி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சிலம்பொலி

என்பதற்குக் கடலாடு காதையில், மாதவி அணிந்திருந்த அணிகளின் பட்டியலைக் காட்டி முடிவு செய்வது முறை யாகாது.

கோவலன், மாதவி உறவு கொண்டதினாலேயே வறியன் ஆகிவிட்டான் என்பத்ற்குக் கணிகையொடு ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுற” எனப் பதிகத்தில் (15.16) கூறியிருப்பதைக் காட்டி ஆசிரியரைச் சான்றுக்கு அழைக்க எண்ணக் கூடும்.

இது. ஆசிரியர் கூற்று அன்று; சீத்தலைச் சாத்தனார் கூறியது. ஆசிரியர் கூற்று என்றே கொண்டாலும், அது கூறிய ஆசிரியரே, அவன் கடலாடச் செல்லும் போது, இராச வாகனமாம் அத்திரி ஏறிச் சென்றான் என்றும், அந்நிலையிலும், அவன் வானம் போல் வரையாது. வழங்கும் வள்ளலாகவே வாழ்ந்திருந்தான் என்றும். கூறியுள்ளார். "வான வண்கைய்ன் அத்திரி ஏற்.

(கடலாடு: 119) என்ற வரியையும், 'இராச வாகன மாகிய அத்திரி” என்ற அடியார்க்கு நல்லார் உரை. பினையும் காண்க: இதனால், அவர் பதிகத்தில்,

கூறியது வலுவற்றுப் போய் விடுவது உணர்க.

"கணிகையொடு ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடுற” என ஆசிரியர் கூறியது மட்டுமன்று; 'சலம்புனர் கொள்கைச் சலதியொடு ஆடிக் குலந்தரு வான் பொருட்குன்றம் தொலைந்த இலம்பாடு” (கனாத் திறம் 69-71) எனக் கோவலனே கூறியுள்ளான். ஆகவே, கோவலன் பொருள் அழிவுக்கு மாதவியே காரணம் என் பதற்கு வேறு சான்று வேண்டா என வாதிடல் கூடும்.

ஆனால், கூறியவன் பரத்தையாம் மாதவியோடு உறவு கொண்டிருந்து விட்டுப் பல்லாண்டு கழித்தே மனைக்குத் திரும்பியவன் என்பதையும், கூறுவது, மனைவியாம் கண்ணகியிடம் என்பதையும் கருத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/48&oldid=560671" இலிருந்து மீள்விக்கப்பட்டது