பக்கம்:சிலம்பொலி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

சங்கத் தமிழ் நூல்கள் என்ற சிறப்பினுக்குரிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு, ஐம்பெருங் காப்பியம் என்ற தொகை வரிசையுள் ஐம்பெருங்காப்பிய வரிசையுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆன்றோர் பலர் செய்துவரும் சிலப்பதிகாரத் திறனாய்வு, கானல் வரி என்னும் தலைப்பிட்டுள்ள பல்வேறு நூல்களில் காணப்படும் கருத்துக்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே, “சிலம்பொலி” என்ற இந்நூல்;

"கபிலர்”, “பரணர்” போலும் பல நூல்களின் ஆசிரியராம் புலவர் கோவிந்தன் அவர்கள், இந்நூல் எம் வெளியீடாக வெளிவர ஒப்புதல் அளித்தமைக்கு, புலவர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நிலையில், புலவர் அவர்களின் நூல்களுக்கு அளித்து வந்த ஆதரவினை, எம் வெளியீடாம் இந்நூலுக்கும் அளித்து, வெளியீட்டுத் துறையில் எம் கன்னி முயற்சிக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகின்றோம்.

-பதிப்பகத்தார்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/5&oldid=1026102" இலிருந்து மீள்விக்கப்பட்டது