46
சிலம்பொலி
“நம் வீட்டில் இருக்கும் போது, தன் செல்வச் சிறப்பு மனைவிக்கு அஞ்சாத் தன் ஆண்மை போலும் பொய்ப் பெருமைகளைக் கூறுபவன், தன் மனைக்குச் சென்றதுமே, மகவீன்று கிடக்கும் மனைவியிடும் ஆணைகளையெல்லாம், அவள் ஏவும் ஏவல்களையெல்லாம், கண்ணாடி முன் நின்று, நாம் கையைத் தூக்கினால், தானும் கையைத் தூக்கியும், நாம் காலைத் தூக்கினால். தானும் காலைத் தூக்கியும், நாம் செய்வதையே செய்து, காட்டும் கண்ணாடிப் பாவை போல், அவள் ஆட்டிய படியெல்லாம் ஆடிக் கிடப்பன்” எனக் கூறி, அவன் செயலை எள்ளி நகையாடுகிறாள் பிறிதொரு பரத்தை.
“எம்மில் பெருமொழி கூறித், தம்மில்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல மேவன
செய்யும் தன் புதல்வன் தாய்க்கே.”
- குறுந்:8.
பரத்தையர் ஒழுக்கம் உடைய ஆடவரின் இவ்வியல்பினைக் கண்ணகியும் அறிவாள். அதனால், “சலதியொடு ஆடிக் குலம் தரும் வான் பொருள் குன்றம் தொலைந்த இலம்பாடு நாணுத்தரும்” என்ற கோவலன் கூற்றும், அது போன்றதே எனக் கொண்டாள். தன் உள்ளத்தில் கொண்ட அக்கருத்தை, மேலே கூறிய இல்லத்தரசியர், வாய் விட்டுக் கூறியது போல் அல்லாமல், நாகரிகமாகப் புன்முறுவல் காட்டிக், கூறாமல் கூறியுள்ளாள். அதனால்தான், நாணுத் தரும் எனக் கூறியதை அடுத்து, “நலங் கேழ் முறுவல் நகைமுகம்” காட்டினாள் கண்ணகி. [கனாத்திறம்: 72]
ஆக, சலதியோடு ஆடித் தொலைத்த இலம்பாடு நாணுத்தரும் எனக் கோவலன் கூறியதைக் கண்ணகி நம்பவில்லை என்பது தெளிவாகிறது. ஆகவே, மாதவி-