பக்கம்:சிலம்பொலி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு லவர் கா, கோவிந்தன் 47

யோடு ஆடியே, கோவலன் வறுமையுற்றான் என்பதற்குச் “சலதியொடு ஆடிக் குலந்தரும் வான்பொருள் குன்றம் தொலைந்த இவம்பாடு” என்ற கோவலன் வாக்குமூலமும் சான்றாக அமைதல் இயலாது.

ஆக, இதுகாறும் எடுத்துக் காட்டிய விளக்கங்களால், மாதவிக்காகச் செலவிட்டே கோவலன் வறியனாகி விட்டான் என்ற தெ. பொ. மீ. கூற்று, எவ்வகையாலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று என்பது தெளிவாக்கப் பட்டது. .

அடுத்து, 'கோவலன் வரையறை யற்றுச் செலவழிப் பதை மாதவியும் அறிந்திருந்தாள்; ஆனால், கோவலனின் அவ்வாரவார வாழ்க்கையை அவள் எதிர்க்கவில்லை' என்ற தெ. பொ. மீ. கூற்றில் உண்மை யிருக்கிறதா என்பதை இனிக் காண்பாம்.

கோவலன் பொருளழிவுக்குக் காரணமான செலவினங்' களாகச் சிலப்பதிகாரத்தால் தெரிவன: ஒன்று: ஆயிரத். தெண் கழஞ்சு பொன் கொடுத்து மாதவி மாலையை' வாங்கியது. இரண்டு மாதவி மகள் மணிமேகலையின் பெயர்சூட்டு விழாவின் போது, தானம்பெற வந்தார்க்குச் செம்பொன் மாரி பொழிந்தது. மூன்று: பிள்ளை நகுலம் இறப்பதற்குக் காரணமானாள் என்பதனால் கணவனால் கைவிடப்பட்ட பார்ப்பிணிகை, வட எழுத்து வாசகம், எழுதிய ஏட்டை வாங்கி, தானம் செய்து, அவள் துயர் தீர்த்ததோடு, கானம் போன அவள் கணவனையும். கொணர்ந்து உறுபொருள் கொடுத்து நல்வழிப் படுத்தியது. நான்கு: பொய்ச் சான்று கூறிப் பூதத்தால் புடைத்துணப் பட்டானின் மனைவியையும், அவள் சுற்றத் தையும் பசிப்பிணி போக்கிப் பல்லாண்டு புரந்தது. இவை: ஒவ்வொன்றும், கோவலன் வாழ்வில் ஒரு முறையே நிகழ்ந்த நிகழ்ச்சிகள். இவையல்லாமல் கோவலனின் பொருள் அழிவிற்கு முழு முதல் காரணமாம் பிறிதொன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/53&oldid=560676" இலிருந்து மீள்விக்கப்பட்டது