பக்கம்:சிலம்பொலி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-48 சிலம்பொ லி

றும் உளது. அது, நகையாடாயம், குரல்வாய்ப்பாணர்,

நகரப் பரத்தர் ஆகியோருடன், குறிக்கோள் இன்றி, வாழ்நாளெல்லாம் திரிந்தது வகையில் ஆன பொருளழிவு.

இது, அவனின் அன்றாட நிகழ்ச்சிகள். நாள்தோறும் நடைபெற்ற பொருளழிவு.

இச் செலவினங்களுள் முதல் இரண்டை மட்டுமே மாதவி அறிவாள். ஆனால், ஆயிரத்தெண் கழஞ்சு பொன் கொடுத்து மாலை வாங்கியதை, அவள் தடுத் திருக்க இயலாது; அது, கோவலன் உறவு ஏற்படுவதற்கு முன்பே நிகழ்ந்துவிட்ட, கோவலன் உறவு ஏற்படுவதற்குக் காரண மான செலவு; அதுவும் அவள் மனையிடத்தே நடந்தது அன்று; நகர நம்பியர் திரிதரும் தெருவில் நடைபெற்றது. மகள் மணிமேகலை பெயர் சூட்டு விழாவின்போது, தான மாகப் பொற்காசுகளை வழங்கியது, அவளும் விரும்பிய செலவு; ஆகவே, அதுவும் அவளால் மறுக்க வேண்டாத செலவு.

இவ்விரண்டையும் தவிர்த்துப் பிற செலவுகளை “மாதவி அறிந்திருக்க இயலாது. பார்ப்பினி பாவம் தீர்த்த செலவு, பெருங்குடி வணிகர் பீடிகைத் தெருவில். பொய்ச் சான்று கூறினான் மனைவியின் சுற்றம் ஒம்பிய செலவு,பூதச் சதுக்கத்தில்.பாணரொடும், பரத்தரொடும் திரிந்து செலவிட்டது பூம்பொழில் அகத்தும், நாளங் காடியிலும். இவ்விடங்கள் மாதவி கண்டு அறியாத இடங்கள். அரங்கேறச் சென்ற அரசவை, இந்திர விழா வில் ஆண்டு தோறும் ஆடிய விழா அரங்கு, கடலாடக் கோவலனுடன் சென்ற கடற்கரை ஆகிய இவை தவிர்த்துப் புகார் நகரத்தை அறியாதவள் மாதவி. இங்கெல்லாம் செல்லப் புகார்நகரத்துப் பெருவிதிகளைக் கடந்தே சென்றனளாயினும், சென்றது கொல்லாப் பாண்டியின் உள் அமர்ந்தே ஆதலின், அவ்வீதிகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/54&oldid=560677" இலிருந்து மீள்விக்கப்பட்டது