பக்கம்:சிலம்பொலி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 49.

கண்டு சென்றவள் அல்லள். கோவலனோடு கடல்விழாக் காணச் செல்லும் போது,

'மானமர் நோக்கியும் வையம் ஏறி” (கடலாடு: 120). எனப் பொதுப்படையாகக் கூறினும், கானல்வரி முடிந்து கோவலன் பிரியத் தனித்துத் திரும்பிய போது,

'கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள் புக்கு”

(கானல் : 52) என வண்டியின் உள் அமர்ந்தே திரும்பி, ன ள் எனத் தெளிவாகக் கூறியிருப்பது காண்க. கோவல னோடு சென்ற கடற்கரைக் கண்ணும், கடற்கரைக்கு வருவார் பலரும் தன்னைக் காணவும், வருவார் பலரையும் தான் காணவும் வாய்ப்புடைய இடத்து அமர்ந்து கானல் வரி பாடினாள் அல்லள். மாறாக, இவ்விரண்டிற்குமே வாய்ப்பு இல்லாத நிலையில், தாழை வேலியாகச். சூழ்ந்து கிடந்த புன்னையின் அடியில், சுற்றிலும் திரை வளைக்கப்பட்ட இடத்தில் இருந்தே கானல்வரி: பாடினாள். -

'கடற்புலவு கடிந்த மடற்பூந் தாழைச் சிறைசெய் வேலி அகவயின் ஆங்கோர் புன்னை நீழற் புது மணற் பரப்பில் ஒவிய எழினி சூழ உடன் போக்கி விதானித்துப்படுத்த வெண்கால் அமளி மிசை”

- கடலாடு:166-170.

மாதவி புகார் நகரத்தில் பிறந்தவளேயாயினும், அந்: நகரத்துப் பல்வேறு பகுதிகளைச் சென்று பார்த்தவள் அல்லள். புகார் நகரத்துப் பூஞ்சோலைகளும் அவளுக்குத் தெரியா. கெளசிகன் என்ற இருபிறப்பாளன் மகளாய்ப் பிறந்து மாருதவேகன் என்ற விஞ்சையனால் காதலித்துக் கொண்டுவரப்பட்டுக் காவிரிப் பூம்பட்டினத்தில் கை, விடப்பட்ட சுதமதி அறிந்திருந்த அளவு கூடப் புகார் நகரத்தை மாதவி அறிந்திருக்கவில்லை. புகார் நகரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/55&oldid=560678" இலிருந்து மீள்விக்கப்பட்டது