பக்கம்:சிலம்பொலி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சிலம் பொலி

5

உள்ள பூம்பொழில்கள் எத்தனை; அவை ஒவ்வொன்றின்

இயல்பு யாது என்பதை அச்சுதமதி வாய்க்கேட்டே மாதவி அறிந்து கொண்ட உண்மையை, மணிமேகலை

ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் மலர்வனம்புக்க காதை 44 முதல் 79 வரையான வரிகளில் தெரிவித்திருப்பது காண்க.

ஆகவே, கோவலன் வரையறையின்றிச் செலவழிப் பதை அறிந்திருந்தும், மாதவி அதை எதிர்க்கவில்லை என்ற தெ.பொ.மீ. வாதத்தில் சாரம் இல்லை என்பதை 。垒.窃卯f了凸历。

அடுத்து, 'கானல்வரிக்கு முன்னரே, வாழ்க்கைக்கு வழி என்ன என்று கலங்கிப் புண் பட்டுவிட்டது கோவலன் மனம். இதை மாதவியிடம் கோவலன் குறிப்பாகச் சுட்டி யிருக்கலாம். கோவலன் செல்வம் இழந்த நிலையை மாதவியும் எண்ணியிருத்தல் வேண்டும்' என்ற தெ.பொ.மீ. அவர்கள் முடிவினை நோக்குவாம்.

கோவலன் கொலையுண்டது, கண்ணகி அவனோடு வானாடு அடைந்தது கேட்ட அளவே போதித்தாமம் புகுந்து,தன்பால் உள்ள செல்வம் அனைத்தையும்புண்ணிய தானமாக அளித்துவிட்டுத் துறவறம் மேற்கொண்டவள் மாதவி. செல்வம் தேடும் கணிகையர் வாழ்க்கை தனக்கு மட்டும் அன்று; தன் மகளுக்கும் வேண்டாத ஒன்று எனக் கொண்டு, மகளையும் துறவுக் கோலம் கொண்டவள் மாதவி. -

"காதலன் தன்வீவும், காதலிநீ பட்டது உம் ஏதிலார் தாம்கூறும் ஏச்சுரையும் கேட்டேங்கிப் போதியின்கீழ் மாதவர் முன் புண்ணியதானம் புரிந்த மாதவி தன் துறவும் கேட்டாயோ, தோழி? மணிமேகலை துறவும் கேட்டாயோ, தோழி?” என, வாழ்த்துக் காதையுள், கண்ணகியின் அடித் தோழியே அரற்றிக் கூறுவது காண்க. அத்தகைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/56&oldid=560679" இலிருந்து மீள்விக்கப்பட்டது