பக்கம்:சிலம்பொலி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தன்

53

அப்போதைய உள்ளுணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

கானல் வரிப்பாக்களின் கருப்பொருட்களைத் தெளிவாக உணர, தெ.பொ.மீ. அவர்களின் திறனாய்வு பெருந்துணை புரிகிறது என்றாலும், சிலப்பதிகாரப் பாத்திரங்கள் ஒரு சிலவற்றின் பால் கொண்டு விட்ட ஈடுபாட்டின் விளைவாக, அப்பாத்திரங்கள் குறித்து, அவர் கொள்ளும் முடிவு மறு ஆய்வுக்கு உரியதாகவும் உளது.

தான் பாடிய கானல் வரிப் பாக்களில், பாட்டுடைத் தலைவியாகக் கோவலன் தன் மனைவி கண்ணகியையே கொண்டுள்ளான் என்பதற்காகப் பல்வேறு சான்றுகளைத் தர முற்படும் தெ.பொ.மீ. அவர்கள் கானல் வரி முதல் இரு பாடல்களில், காவிரியை விளிக்கக் கோவலன் “கயற் கண்ணாய்!” என்ற தொடரை ஆண்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, “கண்ணகியைக் கண்ட கவுந்தி அடிகள், “கயல் நெடுங்கண்ணி” என்றே கூறுகிறார். கோவலனைக் “கயல் நெடுங்கண்ணி காதற் கொழுந!” என அவளுடைய கயற்கண்களில் ஈடுபட்ட காதலோடு பிணைத்தே காண்கிறார். கண்ணகியோடு உடனிருந்த நிலையைக் கோவலனும் மறக்கவில்லை. கண்ணகி, கோவலனைப் பிரிந்த நிலையில், அவள் கயற்கண்ணை நினைந்தே, “செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப” என இளங்கோவடிகளும் பாடுகிறார். பின்னும், கோவலனும் கயலையே நினைப்பான், இங்கே காவிரியைப் புனைந்துரைத்தது கண்ணகிக்கு எவ்வளவு பொருத்தமாக அமைகிறது! கண்ணகி பால் தான் கண்டனுபவித்த கற்பின் திறத்தைக் காவிரியின் மேல் அவனையும் அறியாது அவன் அடி மனம் ஏற்றிப் பார்க்கிறது” [பக்கம்: 110, 111] என்ற தம் வாதத்தின் மூலம், அக்கயற்கண் கண்ணகியின் கயற்கண்ணே;

சில—4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/59&oldid=1776308" இலிருந்து மீள்விக்கப்பட்டது