பக்கம்:சிலம்பொலி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சிலம்பொலி

ஆகவே, காவிரி வடிவில், கோவலன் கண்ணகியையே காண்கிறான் என முடிவு செய்துள்ளார்.

ஆக, கயற்கண் என்றால், அது கண்ணகியின் கண் களையே குறிக்கும் என்பதற்குக் கண்ணகியின் கண்களைக் குறிப்பிடும் இளங்கோவடிகளாரும், கெளந்தி அடிகளும் "கயற்கண்ணி" எனக் குறிப்பிடும் தொடர்களையே, அவர் சான்றாகக் கொண்டுள்ளார் என்பது தெளிவு:

கோவலன் பிரிய, அஞ்சனம் தீட்டுவது மறந்த நிலை யிலும், கோவலன் உடன் இருக்க, ஆயர்பாடியில் அஞ் சனம் தீட்டப் பெறும் நிலையிலும், சிலம்பு விற்கக் கோவலன் விடை கொள்ளும் நிலையிலும், இளங்கோ வடிகள் கண்ணகியின் கண்களைக் 'கயல் நெடுங்கண்' |அந்திமாலை: 53, அடைக்கலம்: 132; கொலைக்களம் 94) எனக் கயலோடு தொடர்பு படுத்தியே பாடியுள்ளார் என் பதும், தம்மை வணங்கித் தம் துணை வேண்டி நின்ற நிலையில், மதுரை செல்லும் வழியின் நிலைமைகளை விளக்கிக் கூறும் கெளந்தி அடிகளாரும், கண்ணகியைக் கயல் நெடுங்கண்ணி" நாடுகாண்: 74) என அழைத்து, அவள் கண்ணோடு கயலைத் தொடர்பு படுத்தியே பார்த் துள்ளார் என்பதும் உண்மை.

ஆனால், கயலைக் கண்ணோடு தொடர்பு படுத்திப் பார்ப்பதை, இளங்கோவடிகளார், கண்ணகி கண்ணுக்கு மட்டுமே உரிமையாக்கிக் கொண்டு விடவில்லை. இந்திர விழாக் காண வந்த விஞ்சையன் மனைவி கண் ணுக்கும் அந்த உரிமையை வழங்கியுள்ளார். "கருங் கயல் நெடுங்கண் காதலி' (கடலாடு : 31 என அவளை அவர் அழைப்பது காண்க. அது மட்டும் அன்று.

காவிரியின் வடகரைவாழ் உழவர் மகளிர் கண்களுக் கும், மதுரை மாநகரத்துப் பரத்தையர் கண்களுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/60&oldid=560683" இலிருந்து மீள்விக்கப்பட்டது