புலவர் கா. கோவிந்தன்
55
கூட, அவ்வுரிமையைத் தந்துள்ளார். “செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர்” (நாடுகாண் : 130), “செங்கயல் நெடுங்கண் செழுங்கடைப் பூசல்” (ஊர் காண் : 141) என முறையே வரும் அவர் பாடல் வரிகளைக் காண்க.
அது மட்டுமன்று. மகளிர் கண்களைப் பற்றிக் கூறும் போதெல்லாம், கயலைத் தொடர்புபடுத்திப் பாடுவதை இளங்கோவடிகளார் பொது நெறியாகவே கொண்டுள்ளார். முழுமதி நிகர் முகம் உடைய புகார் நகரத்து மகளிரைக் குறிப்பிடும் அடிகளார், வானத்து அரவும் பகை அஞ்சிய வான்மதி, கார்மேகத்தைச் சுமந்து கொண்டு, தன் கண் இடங் கொண்டிருந்த குறு முயலை அகற்றி விட்டு, இரு கயல் மீன்களையும், அவற்றின் இடையே ஒரு குமிழம் பூவையும் கொண்டு மண்ணுலகில் வந்து உலா வரும் போலும் என்ற அவர் பாடல் வரிகளைக் காண்க.
“கருமுகில் சுமந்து, குறுமுயல் ஒழித்து,ஆங்கு
இருகருங் கயலொடு, இடைக்குமிழ் எழுதி,
அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சி
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்?”
—இந்திரவிழா: 204-207
அது மட்டுமன்று “கயற்கண்ணாய்!” எனக் கயலைக் கண்ணாக உருவகித்து, இளங்கோவடிகளார் காவிரியை மட்டும் பாடவில்லை; கயல் விளையாடும் வையையாற்றைப் பாடும் போதும், கயலைக் கண்ணாக உருவகித்தே பாடியுள்ளார்.
குரவம் முதலாம் மலர்களால் ஆன துகில், குருக்கம் முதலாம் மலர்களால் ஆன மேகலை, மணற் குன்றுகளாம்