பக்கம்:சிலம்பொலி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

சிலம்பொலி

கொங்கை, முருக்கிதழாம் செவ்வாய், முல்லையாம் வெண்நகை, கயலாம் கண், அறலாம் கூந்தல், உலகு ஓம்பலாம் ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்ட வையை என்ற குலக்கொடி, என்ற வையை ஆற்று வருணனையில் வையை ஆற்றுக் கயலையும், அதன் கண்ணாக உருவகித்துப் பாடியுள்ளமை உணர்க. “விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கருங்கயல் நெடுங்கண்” (புறஞ்சேரி: 166).

ஆகக் “கயற்கண்” என்ற தொடர், கண்ணகியைக் குறிக்கும் என்பதற்கு, இளங்கோவடிகளார் கண்ணகியைக் “கயற்கண்ணி” எனக் குறிப்பிடும் தொடர்களைச் சான்றாகக் கொள்வது அத்துணைப் போதுமானதாகாது. ஆகவே, காவிரியாற்றுக் கயலில், கோவலனைக் கண்ணகியின் கண்களையே காணச் செய்துள்ளார் இளங்கோவடிகளார் என்பது பொருந்தாது.

மேலும், இடைக்குல மடந்தை பால் கோவலனையும், கண்ணகியையும் அடைக்கலமாக ஒப்படைக்கும் போது, கண்ணகியைக் குறிப்பிடும் கௌந்தி அடிகளார், அவள் கண்ணோடு, கயலைத் தொடர்பு படுத்திப் பாராமல், வாளா, “கருந்தடங் கண்ணி” (அடைக்கலம்: 128) என்றும் கூறியுள்ளமையால், கௌந்தி அடிகள் கண்ணகியைக் “கயல் நெடுங்கண்ணி” என அவள் கண்களைக் கயலொடு தொடர்பு படுத்தியே காண்கிறார் எனக் கௌந்தி அடிகளைச் சான்றுக்கு அழைப்பதும் ஏற்புடையதாக இல்லை.

மேலும், காவிரியாற்றுக் கயல்கள், கோவலனுக்கு மட்டும் கண்களாகக் காட்சி அளிக்கவில்லை; மாதவிக்கும் அவை கண்களாகவே காட்சி அளித்தன. “கருங் கயற் கண் விழித்து நல்கி நடந்தாய் வாழி! காவேரி!” [கானல் வரி : 25] என்ற அவள் பாடலைக் காண்க. ஆகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/62&oldid=1776379" இலிருந்து மீள்விக்கப்பட்டது