புலவர் கா. கோவிந்தன்
57
காவிரிக் கயல் கோவலனுக்குக் கண்ணகி கண்களை நினைவூட்டி விட்டன என்பதில் பொருள் இல்லை என்பது, இதனாலும் தெளிவாதல் அறிக.
கானல் வரிப் பாக்களால், கோவலன் பாடிப் பாராட்டும் காவிரியில் பிறழும் கயல்களைக் கண்ட அளவே, கோவலனுக்குக் கண்ணகியின் கண்கள் கண் முன் வந்து நிற்குமாயின், கோவலன் கானல் வரிப் பாட்டிற்கு முன்னரும், கண்ணகியின் கண்களில் கயலைக் கண்டிருக்க வேண்டும்; கானல் வரிப் பாக்களுக்குப் பின்னரும் அவள் கண்களில் கயலையே அவன் கண்டிருக்க வேண்டும். ஆனால், கானல் வரிக்கு முன்னரோ, அல்லது பின்னரோ, கண்ணகி கண்களில் கயல் வடிவைக் கோவலன் கண்:டானா என்றால் இல்லை.
கண்ணகியை மணந்து மனையறங் கொண்டு சில ஆண்டுகள் வாழத் தொடங்கியது தொட்டுக் கொலையுண்டு, வானாடு அடைந்தது வரையான காலத்தில் கோவலன் கண்ணகியின் கண்களைப் பார்த்ததாக இரண்டு இடங்களை மட்டுமே இளங்கோவடிகளார் கூறியுள்ளார். அவ்விரு இடங்களிலும் அவள் கண்ணில் கயலைக் கண்டான் இல்லை.
கண்ணகியை மணந்து, அவளோடு நிலா முற்றத்தே மகிழ்ந்திருந்த போது, அவளின் நுதல் முதலாம் பல்வேறு உறுப்புகளின் நலம் குறித்துப் பாராட்டிக் கூறும் குறியாக் கட்டுரைக் கண், கோவலன் அவள் கண்களில் முருகனின் வேலைத்தான் கண்டானேயல்லாது கயலைக் கண்டிலன். “அழகிய ஒளி வீசும் நீண்ட வேல் ஒன்றை உன் முகத்துச் சிவந்த, அன்பால் குளிர்ந்த இரு கண்களாக்கிக் கொடுத்துள்ளான். “அஞ்சுடர் நெடு வேல் ஒன்றும், நின் முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டா