பக்கம்:சிலம்பொலி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

சிலம்பொலி

ஈத்தது?" [மனையறம் 51.52] என்ற கோவலனின் குறியாக் கட்டுரை காண்க.

அதே போல், கொலையுண்டு குருதி கொப்புளிக்க வீழ்ந்து கிடக்கும் தன் மார்பைக் கண்ணகி தழுவிக் கொண்டாளாக, எழுந்து நின்ற கோவலன் வானாடு செல்வதன் முன்னர், அழுதேங்கி அரற்றுவாளின் கண்ணீரை மாற்றி, இருந்தைக்க எனக் கூறி விடை கொள்ளும் நிலையிலும், அவள் கண்ணில் கயலைக் கண்டிலன்; மாறாக, “”எழுது எழில் மலர் உண்கண்“” (ஊர் சூழ் 67) என அவளை விளிப்பதன் மூலம் அவள் கண்களில் மலர் வடிவைத்தான் கண்டான்.

ஆக, கண்ணகி கண்களில், கயல் ஒளி விடுவதை என்றும் கண்டிராத கோவலன், காவிரியாற்றுக் கயலைக் கண்டதுமே, அவனுக்குக் கண்ணகியின் கண்கள் நினைவுக்கு வர, காவிரியைக் கண்ணகியாகவே கொண்டு பாடத். தொடங்கினான் என்பதில் பொருள் இல்லை.

“கண்ணகியின் பால் தான் கண்டு அனுபவித்த கற்பின் திறத்தைக் காவிரியின் மேல், அவனையும் அறியாது, அவன் அடி மனம் ஏற்றிப் பார்க்கிறது” என்கிறார். தெ.பொ.மீ. அவர்கள் [பக்கம். 111],

ஆயிரத் தெண் கழஞ்சு பொன் கொடுத்து மாலை வாங்கி மாதவியின் மணமனை புகுவதன் முன்னர்க் கோவலன், சில ஆண்டுகள், கண்ணகியோடு வாழ்ந்தான். அச்சிலவாண்டு காலத்தில், எப்போதேனும், கண்ணகியின் கற்பு நலம் கண்டு பாராட்டியுள்ளானா கோவலன் என்றால், இல்லை. மாறாக, அந்நாட்களில், அவளைப் பொன்னாகவும், முத்தாகவும், மணப் பொருளாகவும் கரும்பாகவும், தேனாகவும், பாவையாகவும், மருந்தாகவும், மணியாகவும், அமிழ்தமாகவும், இசையாகவுந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/64&oldid=1776383" இலிருந்து மீள்விக்கப்பட்டது