புலவர் கா. கோவிந்தன்
59
கண்டு உலவாக் கட்டுரை பல பாராட்டிக் களி மகிழ்வெய்தினானே ஒழிய, அவள் கற்பு நலம் குறித்து ஒரு வார்த்தையும் கூறினான் அல்லன்; மனையறம் படுத்த காதையில் வரும் அவன் உலவாக் கட்டுரைகளை [73-81] காண்க.
கானல் வரி இறுதியில், மாதவியை மாயப் பொய் கட்டும் மாயத்தாளாகவும், ஆடல் மகளே ஆகவும் கொண்டு, மனை புகுந்த கோவலன் மாதவியின் பரத்தமை ஒழுக்கத்திற்கு மாறான கற்பின் திறத்தைக் கண்ணகி பால் கண்டு பாராட்டினனா என்றால் இல்லை. அவள் கற்பின் திறத்தில் கருத்தைப் போக்குவதற்கு மாறாக, அவளின் வாடிய மேனியின் வருத்தம் கண்டே மனம் நெகிழ்ந்தான். [கனாத்திறம்: 68. வரி காண்க.]
கானல் வரி நிகழ்ச்சிக்கு முன்னர், கண்ணகியின் கற்பின் திறத்தை உணர்ந்து கொள்ளும் உணர்வு கோவலனுக்கு வாய்க்கவில்லை.
கௌந்தி துணையால், கண்ணகியோடு பிரியாதுறையும் வாழ்க்கை நலம் பெற்று, மதுரை செல்லும் அந்த இடைக் காலத்திலாவது, அவள் கற்பின் திறத்தைக் கண்டு கொண்டானா என்றால் இல்லை. அவள் கற்பின் திறத்தைத் தானே உணர்ந்து கொள்ள வேண்டியவன் உணராதது மட்டுமன்று; அதைப் பிறர் உணர்ந்து பாராட்டிய பின்னரும் உணர்ந்து கொண்டானல்லன்.
ஐயை கோட்டத்துத் தேவராட்டி, கண்ணகியை “ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி” [வேட்டுவ வரி : 49-50] எனப் பாராட்டினாள். கோசிக மாணிமூலம் கொடுத்தனுப்பிய முடங்கலில் கண்ணகியைக் “குலப்பிறப்பாட்டி” [புறஞ்சேரி : 90] எனக் குறிப்பிட்டு