60
சிலம்பொலி
அவள் கற்பின் பெருமையை, மாதவி அவனுக்கு உணர்த்தினாள். கௌந்தி அடிகளோடு இருந்த கண்ணகியை, “மாசில் கற்பின் மனைவி” [புறஞ்சேரி : 102] எனக் கூறி, அவள் கற்பின் மாண்பை எடுத்துக் காட்டினார் இளங்கோவடிகளார். இவ்வளவிற்குப் பிறகும், கோவலன் கருத்தில், கண்ணகியின் கற்பின் பெருமை இடங் கொள்ளவில்லை; மாறாக, அவளின் மலர் போலும் மேனியும், அதன் நடுக்கமுமாம் புறத் தோற்றத்தையே அவன் காண்கிறான்.
மதுரை மாநகர் சென்று, ஆங்குள்ள வணிகப் பெருமக்களைக் கண்டு வரக் கௌந்தி அடிகளாரிடம் விடை கொள்ளும் நிலையில், கண்ணகியின் கற்பு வாழ்விற்கு ஊறு விளைத்ததற்காக வருந்த வேண்டியவன், அது செய்யாது, அந்நிலையிலும், மலர் போலும் அவள் மேனி நடுங்குவதற்குக் காரணம் ஆனது குறித்தே கலங்குவானாயினன். “நறுமலர்மேனி நடுங்கு துயர் எய்த…சிறுமையுற்றேன்” (ஊர் காண்: 18-20) என்ற வரிகளைக் காண்க.
அது மட்டுமன்று; கற்புடைப் பெண்களின் பெருமைகளை மாதரிக்குப் பெருக எடுத்துக் கூறி விட்டு, கண்ணகியைக் “கற்புக்கடம் பூண்ட தெய்வம்” (அடைக்கலம்:143) எனக், கோவலன் முன்னிலையில், அவன் கேட்க, கௌந்தி அடிகளார் கண்ணகி கற்பின் பெருமையைப் பறை சாற்றினார். அது கேட்ட பின்னராவது, கோவலன் உள்ளத்தில் கண்ணகியின் கற்பு நலமாம் அக அழகு இடங்கொண்டதா என்றால் இல்லை.
ஆயர்பாடியில், மாதரி இல்லத்தில், தனக்கு உணவு படைத்து, வெற்றிலை மடித்துத் தந்து நின்ற நிலையிலாவது கண்ணகி கற்பு நலம் கோவலன் கருத்தில் பட்டதா