பக்கம்:சிலம்பொலி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சிலம்பொலி

தன் கடிமனை புகுந்திருக்க வேண்டும். ஆனால், கோவலன் அது செய்தானா என்றால், இல்லை.

கோவலன் பிரியத் தனியே மனை புகுந்த மாதவி, ஆங்கு மன அமைதி நாடித் தனக்குத் தெரிந்த இசையை யெல்லாம், யாழில் மீட்டுத் தீர்த்தாள். பின்னர்க், கோவலனுக்குக் கடிதம் எழுத ஏற்றமலர்களைத் தேடிக் கொண்டு நீண்டதொரு கடிதத்தைப் பலமுறை நினைந்து நினைந்து எழுதி முடித்து, வயந்த மாலையிடம் கொடுத் துள்ளாள். -

கோவலன் தன் மனைக்குச் சென்றிருக்க மாட்டான் என்பதை வயந்த மாலை அறிவாள். அதனால், அவள், அவன் இயல்பாகத் திரிந்து உறையும் கூலமறுகிற்சென்று கடிதத்தைக் கொடுத்துள்ளாள்.

கோவலன் கடிதத்தைக் கண்டதுமே வாங்க மறுத்து, வயந்த மாலையை உடனடியாகத் துரத்தி விடவில்லை. உடனுறை காலத்து, அவன்மகிழ, மாதவி ஆடிக் காட்டிய எட்டு வகை வரிக் கோலங்களையும் ஒவ்வொன்றாக விரித்துக் கூறி மாதவியைப் பழித்துள்ளான். இவ்வளவும் நடக்க எத்துணைக் காவம், எத்துணை நெடும்பொழுது வேண்டியிருக்கும்! அத்துணை நெடும்பொழுதும், கண்ணகியைக் காணவேண்டும் என்ற கருத்து இல்லாமல் கூலமறுகிலேயே கிடந்துள்ளான். கண்ணகிபால் சென்ற. கருத்துடையான் செயலாகுமா இது?

கண்ணகியை எப்பொழுது அடைந்தான்? 'கங்குல் சுனைகடர் கால்சீயாமுன்’ (கனாத்திறம்:78-79) என்கி" றார் இளங்கோவடிகளார். அதாவது விடியற்போதில் மாதவியைக் கடற்கரைக்கண் மாலையில் பிரிந்து வந்த வன்,கண்ணகியைக் கங்குல்சுனைகடர் கால்சீயாமுன்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/68&oldid=560691" இலிருந்து மீள்விக்கப்பட்டது