புலவர் கா. கோவிந்தன்
63
காண்கிறான். ஆக ஓர் இரவு முழுதும், எங்கோ சுற்றித் திரிந்துள்ளான். இது கண்ணகியின் நினைவாகவே இருந்தவன் செயலாகுமா?
கோவலன் பாடிய கானல் வரிப் பாக்களின் பாட்டுடைத் தலைவியைக் கண்ணகியாகக் கொள்வதில் மற்றுமொரு தடையும் உளது.
“கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய்!” “கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய்!” எனப் பாடியதன் பயனாய், “காவேரி நின் கணவனும் சோழன். கங்கையைப் புணர்ந்தான். நீ அதற்காகப் புலத்தல் செய்திலை; அவன் கன்னியைப் புணர்ந்தான்; நீ அப்போதும் அவனோடு புலத்தல் செய்யவில்லை; என்னே! நின் கற்பின் மாண்பு!” எனக் கற்பு நெறி பிறழாக் காவிரியைப் பாராட்டுகின்றன அப்பாக்கள்.
தெ.பொ.மீ. அவர்கள் கூற்றுப்படி, காவிரி வடிவில் கண்ணகியைக் காண்கிறான் கோவலன் என்பதாயின், அக்காவிரியின் கணவனாம் சோழன், கங்கை, கன்னி ஆகிய இருவரைப் புணர்ந்தது போல, கண்ணகியின் கணவனாம் கோவலனும், கண்ணகி தவிர்த்து வேறு இரு மாதரைப் புணர்ந்தவனாதல் வேண்டும். ஆனால், சிலப்பதிகாரம், கோவலனுக்கு அத்தகு பெருமாசினைக் கற்பிக்கவில்லை. . அவன் பாணரோடும், பரத்தரோடும் திரிந்தவனாக . இருக்கலாம். ஆனால், மாதவி தவிர்த்து, வேறு ஒரு பரத்தையோடு உறவு கொண்டவனல்லன்.
தம் கூற்றிற்குத் தடையாக இது நிற்பதை தெ.பொ.மீ. அவர்கள் உணராமல் இல்லை. “உள்ளுறை போல, ஒட்டணி போல, ஒவ்வொன்திற்கும் உவமேயம் தேடி அலையலாகாது. கங்கையும் கன்னியும் போலக்