பக்கம்:சிலம்பொலி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

வேண்டும் என்ற அவாவின் விளைவாக, அக்காலப் புலவர் பெருமக்கள், ஆயிரமாயிரம் பாக்களைப் பாடிச் சென் றார்கள். ஆனால், அவர்கள் பாடிச்சென்ற அப்பாக்களின் களஞ்சியத்தைக் காக்கத் தவறிவிட்டனர், விழிப்புணர்வு அற்ற சிலர் என்றாலும், அவருள் விழிப்புணர்வோடு இருந்தவர்கள், அழிந்தனபோக, அழியாதிருந்த அப்பழம் பாக்களையெல்லாம் அரிதின் முயன்று தேடிக் கொண்

டார்கள். w

அவ்வாறு தேடிப் பெற்ற அப்பாக்களை, ஊன்றிப் பயின்ற புலமைசால் பெரியார்கள் பவர் ஒன்று கூடி இருந்து, இப்பாக்களில் பொதிந்து கிடக்கும் பொருள் வளம், அப்பாக்களின் அடி அளவு ஆகியவற்றை, அளவு கோலாகக் கொண்டு, அப்பாக்களையெல்லாம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியம் என்ற தலைப்புகளில் தொகுத்து நமக்கு அளித்துச் சென்றுள்ளனர். அவ்வாறு தொகுக்கப் பெற்ற தொகைநூல்களில், ஐம்பெருங்காப்பியத் தொகுப் பில் ஒன்றாவதான சிலப்பதிகாரம், "யாம் அறிந்த :புலவரிலே, கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்த தில்லை” என்றும், 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு' என்றும், மகாகவி பாரதியாரால் பாராட்டப்பெற்ற பெருமைக்கு உரியது. அந்நூலைப் பயின்று வருங்கால், திருவாளர். ம.பொ.சி. அவர்களின் 'சிலப்பதிகாரத் திறனாய்வு' என்ற நூலையும், பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் 'கானல்வரி' என்ற நூலையும், திருவாளர், பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின், 'தமிழர் வரலாறு" என்ற ஆங்கில நூலையும் படிக்க நேர்ந்தது.8 அவ்வாறு படித்தபோது, அவர்கள் கூறியிருக்கும் கருத்துக் கள் சில, இலக்கிய ஆசிரியராம் இளங்கோவடிகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/7&oldid=560630" இலிருந்து மீள்விக்கப்பட்டது