இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
64
சிலம்பொலி
கோவலன் இருவரைக் கண்ணகியின் வேறாகக் கை தொட்டனனா என்று கேட்டல் வேண்டா. கன்னியும், கங்கையும் கடவுள் அருள் விளக்கமானால், ஒன்றன் இரு வேறு கோலங்களாம். மாதவியைத் தெய்வ அரம்பையின் வடிவமாகவே விஞ்சையன் பேசுகிறான். அவளைக் கன்னிக் கோலத்தில் மணந்தது ஒன்று; மணிமேகலை பிறந்த பின், கன்னி நிலை நீங்கத் தாய்மைக் கோலத்தில் கூடியது ஒன்று என இவ்வாறு “ஒன்றனையே இரண்டாகப் பேசலாம்” [பக்கம்: 111] என்ற அவர் சமாதான உரையினைக் காண்க.
தாம் கொண்டு விட்ட பொருளுக்கு நேரும் குறைபாட்டைத் தவிர்ப்பான் வேண்டி, இத்தகு ஓர் அமைதியினை தெ.பொ.மீ. அவர்கள் தேடிக் கண்டாலும், அதுவே அவர் பொருள் கோளின் வலுவற்ற நிலைக்கு வலுவான சான்றாகி விடுவது அறிக.