பக்கம்:சிலம்பொலி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 66 சிலம்பொலி

ஆயினன். வடு நீங்கு சிறப்பின் மனைஅகம் மறந்து' !அரங்கேற்றம்: 174.175) எனக் கூறியுள்ளார் இளங்கோ வடிகளார். மாதவியையும், அவள் மனையையும் விட்டுப் பிரியமாட்டா வேட்கையுடையன் ஆகிவிட்டான் என மாதவி மனையகத்து அவன் நிலை யாது என்பது பற்றிக் கூறியதோடு அமையாது, தன் மனைவியாம் கண்ணகி யையும், அவள் வாழும் தன் மனையையும் மறந்தே போயினான் எனக் கண்ணகி மனையகத்து அவன் நிலை யாது என்பதையும் தெளிவாக்கியுள்ளார்: "விடுதல் அறியா விருப்பினன்' என்பதால், கானல்வரி நிகழ்ச்சி வரை, மாதவியின் மனையைக் கோவலன் பிரிந்தறியான் என்பதும், மனையகம் மறந்தான்’ என்பதால், கானல் வரி இறுதியில் மாதவியை வெறுத்துத் தன் மனை புகும் வரை, கோவலன் தன் மனையையும், மனைவியையும் மறந்தே கிடந்தான்; மறந்தும் மனைப்பக்கவன் சென்றி லன் என்பதும் உறுதியாயின.

கண்ணகியைப் பிரிந்து மாதவியோடு வாழ்ந்த காலத்

தில், மாதவி மனை தவிர்த்துக் கோவலனைக் காணக்

கூடிய இடங்களாகச் சிலப்பதிகாரத்தில் சில இடங்கள் கூறப்பட்டுள்ளன.

கோவலனைத் தென்றலுக்கு உவமையாகக் கொண்டு, கோவலன் போலத் திரியும் தென்றல் எனக் கூறவந்த புலவர், அத்தென்றல் உலாவரும் இடங்களாகக் குறிப் பிட்டவை. ஒன்று, "பூம்பொதி நறுவிரைப் பொழில்.: இரண்டு, "நாள் மகிழ் இருக்கை நாளங்காடி. (இந்திர விழா: 195-196 ஆகக் கோவலன் உலா வரும் இடங்கள், அவனைக் காணக்கூடிய இடங்கள் இவ்விரு இடங்களாம்

என்பது கூறாமல் கூறப்பட்டது.

பிள்ளை நகுலம் இறப்பதற்குக் காரணமாகிக் கணவனாம் மாமறையாளனால் கைவிடப்பட்டு, வட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/72&oldid=560695" இலிருந்து மீள்விக்கப்பட்டது