பக்கம்:சிலம்பொலி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 67

மொழிவாசகம் எழுதிய ஏட்டினை வாங்கிக் கருமக்கழி பலம் கொள்மினோ எனக் கூறித் திரிந்த நிலையில், கோவலன் வருகென அழைத்துத் தானம் செய்யத், தன் துயர் தீரப்பெற்ற மறையாட்டி, அது செய்வாளாத் தேடித் திரிந்த இடங்களில், 'பெருங்குடி வாணிகர் மாடமறுகின் மனைகளும்’ (அடைக்கலம் : 60-61) கூறப் பெற்றுள்ளன. ஆகவே, கோவலன் தன் மனையின்கண் இருந்தே அது செய்தான் எனக் கொள்வதற்கும் இடம் இல்லை. காரணம்: அம்மறையாட்டி திரிந்த இடமாக, வணிகர் மாடமறுகின் மனை மட்டுமல்லாமல், வணிகர் இருந்து வாணிகம் புரியும், வணிகர் வாழிடங்களின் வேறுள 'பீடிகைத் தெருவும்” கூறப்பட்டுளது. (அடைக் கலம் : 60) கோவலன், அம்மறையாட்டியை அழைத்து, அவள் குறை தீர்த்தது, அப்பீடிகைத் தெருவாதலும் கூடும்.

கோவலன் கடற்கரைக்கண் தன்னை விட்டுப் பிரிந்து சென்றானாகத் தனியே மனை புகுந்த மாதவி, கோவலன் பால் கொடுத்து அழைத்து வருக எனப் பணித்து எழுதிக் கொடுத்த கடிதத்தைப் பெற்றுக் கொண்ட வயந்த ம்ாலை, கோவலனைக் கண்டு கடிதத்தைக் கொடுத்த இடம் கூலமறுகு.

ஆக, இம்மூன்று குறிப்புகளாலும், கோவலன் இருந்த இடங்களாகப் பூம்பொழில், நாளங்காடி, பீடிகைத் தெருவு, கூலமறுகு ஆகிய இந்நான்கு இடங்கள் மட்டுமே சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன.

கோவலன், தன் மனைக்கு வழக்கமாக வந்து கொண் டிருந்தான் என்றால், அறவோர்க்களித்தலும், அந்தனர் ஒம்பலும், துறவோர்க்கெதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும்” (கொலைக்களம் : 71-73) ஆகிய, இல்லறக் கடமைகளை ஆற்றக் கண்ணகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/73&oldid=560696" இலிருந்து மீள்விக்கப்பட்டது