72
சிலம்பொலி
தைப் பறி கொடுப்பவன் கோவலன்; மாதவியின் ஆடற் கலையால் ஈர்ப்புண்டே, அவன் அவள் உறவினை மேற்கொண்டான் என்பது தெ.பொ.மீ. கருத்தாதல் தெரிகிறது.
கோவலன் கலையுள்ளம் படைத்தவன்தான்; அதில் ஐயம் இல்லை; யாழை வார்தல், வடித்தல் போல்வன மேற்கொண்டு, மீட்டுதற்கு உரியதாக்கி, இசை யோர்த்துப் பார்த்த மாதவி, அதை மேலும் உறுதி செய்து கொள்ள விரும்பிய நிலையில், ஏவல் முறையில் அல்லாமல், இரக்கும் நிலையில் இருந்து, இசை வாசிக்கும் தாளம் யாதோ அறியேன் எனக் கூறி, யாழை அவள் கை நீட்டியதும், அவனும் அது வாங்கிக் கானல் வரிப் பாணிகளை மாதவி மனம் மகிழ வாசித்ததும், அவன் இசையறிவிற்கு ஒர் எடுத்துக் காட்டு.
"“எட்டு வகையின் இசைக் கரணத்துப்
பட்டவகை தன் செவியின் ஒர்த்து
‘ஏவலன்; பின், பாணியாது?’ எனக்
கோவலன் கையாழ் நீட்ட, அவனும்
காவிரியை நோக்கினவும், கடற்கானல் வரிப்பாணியும்
—கானல் வரி.
அது போலவே, மதுரை செல்லும் இடை வழியில் கோசிகமாணியைக் கண்ணுற்ற பின்னர், துர்க்கையின் போர்க் கோலக் காட்சியைப் பாடியவாறே வந்து எதிர்ப்பட்ட பாணர் கொணர்ந்த செங்கோட்ட யாழ் உறுப்புகளை, அரும்பாலை எனும் பண்ணிசை எழுவதற்கு ஏற்பத் திருத்தி அமைத்து, முறைப்படி மீட்டுச் செவிப் புலத்-