பக்கம்:சிலம்பொலி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 73

தால் அறிந்து, அப்பண்ணையும், அப்பண்ணின் திறத்தை யும் அவரோடு கலந்து பாடினான்.

'ஆடியல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணரின் பாங்குறச் சேர்ந்து செந்திறம் புரிந்த செங்கோட்டு யாழில் தந்திரி கரத்தொடு திவவுறுத்து யாஅத்து ஒற்றுறுப்பு உடைமையின் பற்றுவழிச் சேர்த்தி, உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி வரன்முறைவந்த மூவகைத் தானத்துப்

பாய்கலைப் பாவைப் பாடற் பாணி ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப் பாடற்பாணி அளைஇ அவரொடு’’

- புறஞ்சேரி இறுத்தகாதை : 1.04-113.

கோவலன் கலையுள்ளம் வாய்க்கப் பெற்றவன் என்பதை, இவ்விரு நிகழ்ச்சிகளும் ஐயமற உறுதி செய் கின்றன என்பது உண்மை. அது வேறு; ஆனால், மாதவி யின் ஆடற் கலையின் திறம் கண்டு, அக்கலையால் ஈர்ப் புண்டே, அவன் மாதவி மனை புகுந்தான் என்பதற்கு அவை சான்றுகள் ஆகாடு - -

“அவள் பாட்டுக்கும் தாளத்துக்கும் ஏற்ப, அவள் வீசிய நெடுங்கண் வீச்சில் தன் மனத்தைப் பறி கொடுத் தான்" என அறுதியிட்டுக் கூறிய தெ. பொ. மீ. அவர்கள் மாதவியின் அரங்கேற்றத்தைக் கண்டே, கோவலன் மனம் மருண்டான் என இளங்கோவடிகளார் எங்கும் கூறவில்லை' என்ற உண்மை, தம் முடிவிற்குத் தடையாக நிற்பது உணர்ந்தமையால், "அவ்வரங்கேற்றத்தைக் குறிப்பாக யாரெல்லாம் கண்டனர் எனவும், அவர் கூறவில்லை’ என்ற வரிகளில் அமைதி காண முயன்றுள்ளார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/79&oldid=560702" இலிருந்து மீள்விக்கப்பட்டது