இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கருத்துக்கும், அக்காலத் தமிழக வரலாற்று உண்மைக்கும் மாறுபட்டிருக்கக் கண்டேன்.
திரு. பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் கூற்றில் ஏற்புடையவல்லாத கருத்துக்களுக்கான விளக்கங்களை, நான் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ள, “தமிழர் வரலாறும், திறனாய்வும்” என்ற தலைப்புள்ள என் நூலில் வேண்டிய இடங்களில், இணைப்புகளாக இணைத்து அளித்துள்ளேன். திருவாளர்கள் ம.பொ.சி., தெ.பொ.மீ. ஆகியோர் கருத்துக்கள் சிலவற்றிற்கு அளிக்கும் விளக்கங்களின் தொகுப்பே “சிலம்பொலி” எனும் தலைப்புள்ள இந்நூல். என் ஏனைய படைப்புகளுக்குத் தமிழகத்துப் பெரியோர்களாகிய தாங்கள் காட்டிய பேரன்பையும், பாராட்டையும், இந்நூலுக்கும் வழங்கி, மேலும் தமிழ்ப் பணி ஆற்றும் துடிப்புணர்ச்சி, என் உள்ளத்தில் மீண்டும் துளிர் விடத் துணை நிற்க வேண்டுகிறேன்.
கா.கோவிந்தன்