பக்கம்:சிலம்பொலி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 75

'பூம்பொதி நறுவிரைப் பொழிலாட் டமர்ந்து, நாள் மகிழ் இருக்கை நாளங்காடியில் பூமலிகானத்துப் புதுமணம் புக்குப், புகையும் சாந்தும் புலராது சிறந்து நகையாடாயத்து நன்மொழி திளைத் துக் குரல்வாய்ப் பாணரொடு, நகரப் பரத்தரொடு திரிதரு மரபின் கோவலன்...”

-இந்திர விழஆரெடுத்த காதை: 195-201.

நாடாளும் அரசர் காண ஆடும் வேத்தியல் ஆட்டம் வல்ல மாதவி, நாட்டு மக்கள் காண ஆடும் பொதுவியல் ஆட்டமும் கற்றவள். "இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து," "வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து நாட்டிய நன்னூல் நன்கு கடைப் பிடித்து’ (அரங்கேற்றுக் காதை:12:39-40) என்ற வரிகளைக் காண்க. கோவலன், அவள் ஆடிய அத்தகு பொதுவியல் ஆட்டத்தைக் கண்டு. அவள் ஆடற்கலையால் ஈர்ப்புண்டு, அவள் மனை புகுந் திருத்தல் கூடும் என்பதற்கும் வாய்ப்பு இல்லை. மாதவி, வேத்தியலைப் போலவே, பொதுவியலையும் ஆடியவள் என்பது உண்மை. ஆனால் அப்பொதுவியல் ஆட்டத்தை, அரசவை ஏறி அரங்கேறிய பின்னர் வந்த இந்திர விழாக் காலங்களில் ஆடியதல்லாது, அரங்கேற்றத்திற்கு முன்னர் ஆடியவள் அல்லள்.ஆகவே,மாலை வாங்கி மனைபுகுவதன் முன்னர், கோவலன் அவள் ஆடலைக் கண்டிருக்கவே இயலாது; ஆகவே, அவள் ஆடற்கலையால் ஈர்ப்புண்டேன். அவன், அவள் மனைபுகுந்தான் என்பது அறவே பொருந் தாது.

அரசவை சென்று, அவள் ஆடலைக் கண்டவனாயின் மாலையை அவன் ஆண்டே வாங்கியிருப்பன்; ஆனால், மாலை அங்கு வாங்கப்படவில்லை;மாறாக,நகர நம்பியர். திரிதரு தெருவில்தான் வாங்கப்பட்டது. "நகர நம்பியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/81&oldid=560704" இலிருந்து மீள்விக்கப்பட்டது