பக்கம்:சிலம்பொலி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“கோவலன் தன்னோடிருந்த காலத்து, அவனைப் பிரிந்ததால் கடுந்துயரத்தைக் கண்ணகியும் எய்துவாள் என்று உணராமை, அவளிடத்து (மாதவி) நாம் காணும் ஒரு பெருங்குறை” [பக்கம்: 97] என மாதவி மீது தெ.பொ.மீ. குற்றம் சாட்டுவது முறைதானா?

ஒரு நிகழ்ச்சியால், ஒருவர் இன்பமோ, துன்பமோ உற நேர்ந்த நிலையில்தான், அது போலும் நிகழ்ச்சி பிறர்க்கு வாய்க்கின், அவர்களும் அது போலும் இன்ப துன்பங்களுக்கு ஆளாவர் என்பதை உணர்ந்து கொள்வர்.

ஒருவன், தன்னினும், எல்லா வகையிலும் மெலிந்து இருப்பவர்க்குக் கொடுமை இழைக்க முனையும் முன்னர் ஒரு கணம், தான் ஒரு காலத்தில், தன்னிலும் வலியார் கையில் அகப்பட்டுப் பட்ட இன்னலைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பார்ப்பானே ஆகில், தன்னிலும் மெலியார்க்குக் கேடு செய்யும் எண்ணம் அக்கணமே அவன் நெஞ்சை விட்டு அகன்று விடும்.

“வலியார் முன்தன்னை நினைக்க; தான், தன்னின் மெலியார் மேல் செல்லுமிடத்து” (குறள்:250) எனக் கூறியதன் மூலம், ஒருவர் தனக்கு ஒரு கேடு நேர்ந்த வழியே, பிறர் கேடுக்கு உள்ளாகும் போது அவர் படும் துயர்க் கொடு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/83&oldid=1775958" இலிருந்து மீள்விக்கப்பட்டது