80
சிலம்பொலி
வேண்டிக் கொண்டாள். அதில், தன் துயர்க்கு வருந்தாது, அவர்கள், பிறந்த மண்ணைத் துறந்து, இரவோடு இரவாக, வேற்றூர் போக நேர்ந்தமைக்குத் தானே காரணமாகி விட்டமைக்கே வருந்தினாள்.
“குலப் பிறப்பாட்டியொடு,
இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது
—புறஞ்சேரி : 89-91
அது மட்டுமன்று; மதுரையில், கோவலனுக்கும், கண்ணகிக்கும் நேர்ந்த கதி கேட்ட அக்கணமே, தன் கணிகைய்ர் வாழ்க்கையன்றோ இத்துணைக் கொடுமைக்கும் காரணமாயிற்று எனக் கொண்டு, அது போலும் கொடுமைக்கு, இனி, தான் மட்டும் அன்று; தன் மகளும் காரணமாகக் கூடாது என்ற உணர்வு எழவே, புத்தப் பள்ளி புகுந்து, ஆங்குறை மாதவர் தாள் பணிந்து, புண்ணிய தானமாகப் பொருளையெல்லாம் போக்கி விட்டுத் தான் துறவு மேற்கொண்டது மட்டுமல்லாமல், தன் கண்மணி மணிமேகலையின் கோதைத் தாமம் குழலொடு களைந்து, அவளையும் துறவுக் கோலம் பூணச் செய்து சாந்தி பெற்றாள்.
மாதவியின் இம்மாண்பு நலனைச் செங்குட்டுவன் கேட்க, மாடலமறையோன் மட்டுமல்லாமல், கண்ணகியின் அடித் தோழியும் வாயாரக் கூறி, மனதாரப் பாராட்டியுள்ளனர்.
“மற்று அதுகேட்டு மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு நற்றிறம் படர்கேன்
மணிமே கலையை வான்துயர் உறுக்கும்
கணிகையர் கோலம் காணாது ஒழிகெனக்”