பக்கம்:சிலம்பொலி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தன்

85

யுள்ளார். அதனால்தான், மதுரைப் புறஞ்சேரி, தம்மைப் போலும் மாதவத்தோர்க்கல்லாது, கோவலன் போலும் இல்லறத்தவர்க்கு இடமாதல் இயலாது என்பதை அறிந்து, கோவலனையும், கண்ணகியையும், மதுரை அகநகர்க்கு அனுப்பி வைக்கும் நிலையில், “கோவல! போகும் இடத்தில், உங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு, உங்கள் நிலையை நீ எடுத்துச் சொல்லும் உன் சொல் திறத்தில்தான் உளது” எனக் கூறி அனுப்புகிறார்.

அரைசர் பின்னோர் அகநகர் மருங்கின், நின்
உரையிற் கொள்வர்”

என்ற கௌந்தி அடிகளார் உரை காண்க. (அடைக்கலம் : 109:110) “நின் உரை” என்பதற்கு “மாசாத்துவான் என்னும் பிரகாசம்; வணிகர் நின் பிரகாசத்தாலே, நின்னை அகநகர் மருங்கில் வைத்துக் கொள்வர்” என அரும்பத உரையாசிரியரும், “மாசாத்துவான் மகன் என்னும் புகழால் எதிர் ஏற்றுக் கொள்வார்; நின் உரை என்றார். மாசாத்துவான் மகன் என்பதனை” என அடியார்க்கு நல்லாரும் உரை விளக்கம் அளித்தாலும், “நின் உரை” என்பதற்கு, “உன் சொல் திறம் அல்லது உன் சொல்லாற்றல்” எனப் பொருள் கோடலே பொருந்தும். “வாயில் இருக்கிறது வழி”, “வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்” என மக்களிடையே வழங்கும் பழமொழிகளையும் காண்க.

தானும் வாழ்வான்; உடன் அழைத்து வந்திருக்கும் கண்ணகியையும் வாழ வைப்பான் கோவலன் என்ற நம்பிக்கை கௌந்தி அடிகளார்க்கு உண்டாகவில்லை. அதனால்தான், மதுரை மாநகரில், மன்னர்க்கு அடுத்த வரிசையில் வைத்து மதிக்கத் தக்க மாபெரும் வணிக மக்கள், தங்களுக்குக் கிடைத்தற்கரிய பெருமை மிகு

சில—6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/91&oldid=1779845" இலிருந்து மீள்விக்கப்பட்டது