பக்கம்:சிலம்பொலி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

சிலம்பொலி

விருந்தினராக ஏற்றுக் கொள்ளத் தக்க பெருநிலையும், பெருவாழ்வும் உடையோராகிய கோவலனையும், கண்ணகியையும், ஏதும் அற்றவர்களாக, திக்கற்றவர்களாகக் கொண்டு, ஒர் ஆயர் மடந்தை பால், அடைக்கலப் பொருள்களாக ஒப்படைக்கத் துணிந்தார் கௌந்தி அடிகளார்.

மாநகரத்து வணிகர்கள் பால், தங்களை அறிமுகம் செய்து கொண்டு, அவர்கள் துணையோடு வாழ்க்கையைத் தொடங்க மாட்டான் கோவலன்; அது செய்ய முனைவான் என்றாலும், அதை, அத்துணை விரைவில் செய்து முடிக்க மாட்டான்; சில நாட்களாவது ஆகும். அது வரை, அவர்கள் இருப்பதற்கு ஓர் இடத்தைத் தேடித் தர வேண்டுவது இன்றியமையாதது; அது செய்யாது விட்டால், கோவலனும், கண்ணகியும், மதுரை மாநகரில் இருக்கவும் இடம் காணா அனாதைகள் போல் அலைய நேரும் என அஞ்சினார். அதனால்தான், “அரைசர் பின்னோர் அகநகர் மருங்கின் உரையிற் கொள்வர், ஆகவே, மாநகர் புகுக” என வழி காட்டி விடை கொடுத்தவர், அப்படியே போக விடுத்துத், தம் பணி நோக்கிப் போவது செய்யாது, மாதரியைக் கண்ணுற்றதும், அவ்விருவரையும் அவள் பால் அடைக்கலப் பொருள்களாக ஆக்கி அனுப்பி வைத்தார். . .

வணிகப் பெருமக்களைக் கண்டு, வாழ ஒரு வழி வகுத்துக் கொள்வான் கோவலன் என்ற நம்பிக்கை கௌந்தி அடிகளுக்கு உண்டாகவில்லை என்பது, “மதுரை மாநகரத்து வணிகப் பெருமக்கள், இவர்களைத் தங்கள் வீட்டிற்கு வருதற்கரிய சிறந்த விருந்தினர்களாக மதித்து வரவேற்றுக் குடி அமர்த்துவர்; அவர்கள் அது செய்யுங்காலும், இவர்களைக் கொண்டு சென்று காப்பாயாக” என மாதரி பால் கூறும் போது, “இவர்கள் நிலைமை அவ்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/92&oldid=1779846" இலிருந்து மீள்விக்கப்பட்டது