புலவர் கா. கோவிந்தன்
87
வணிகப் பெருமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தாம் யார் என்பதை இவன் எடுத்துக் கூறினால்,” என்ற ஐயப்பாடு வாய்பாட்டினால் கூறும் முகத்தான் தம் ஐய உணர்வை அடிகளார் தெளிவாக வெளிப்படுத்தியிருப்பது காண்க.
“மாதரி!கேள்; இம்மடந்தை தன் கணவன்
தாதையைக் கேட்கின் தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்”
என்ற வரிகளைக் காண்க. (அடைக்கலம் : 125-128)
ஆகக் கோவலன் சிந்தித்துச் செயல்படுபவன் அல்லன் என்பதைக் கௌந்தி அடிகளாரும், அவனோடு பழகிய சின்னாட்களிலேயே அறிந்து கொண்டார் என்பது தெளிவாகிறது.
காது, கை, கால்களில் அணியும் அணிகள் இணையாக அணிய வேண்டுவன. அத்தகைய அணிகளில் ஒன்றுதான் சிலம்பும். பண்ண வேண்டுமாயினும், இணையாகவே பண்ண வேண்டும். வாங்க வேண்டுமாயினும், இணையாகவே வாங்க வேண்டும். விற்க வேண்டுமாயினும், இணையாகவே விற்க வேண்டும். ஒன்றை விற்று விட்டு, ஒன்றை வைத்திருப்பதும் பயனில்லை. அது போலவே, ஒன்றை மட்டும் வாங்குவதும் பயன் அளிக்காது. இதில் தெளிவான சிந்தனை உடையவள் கண்ணகி. அதனால்தான் “இலம் பாடும் நாணுத் தரும்” என்ற கோவலனுக்கு விடை அளித்த கண்ணகி, “சிலம்பு உள கொண்மென” (கனா:73) என்ற தொடரில், “சிலம்பு உள” எனப் பன்மை வாய்பாடு கூடிய வகையால், இரண்டு சிலம்புகளையுமே கொள்க எனக் கூறினாள். கண்ணகி, சிலம்புகளை இணையாகவே கொடுக்க முன் வந்திருக்கவும், கோவலன், “சீறடிச் சிலம்-