பக்கம்:சிலம்பொலி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 93."

எனத் தம் கூற்றுப்படக் கூறியது மட்டும் அல்லாமல் "அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஒம்பலும் துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை' (கொலைக் களக் காதை: 71 - 73) என, மனைவியோ டிருந்து மனை யறம் நடாத்த மறந்து போன கோவலன் செயலைக்,. கண்ணகி, அவன் நேர்முகமாகவே நின்று எடுத்துக் காட்டும் நிலையின் அவள் கூற்றிலும் வைத்துக் கூறி யுள்ளார் இளங்கோவடிகளார். *

மேலும், நாடு காக்கும் காவலரும் வேட்கை

கொள்ளும் பெருவளம் கொண்ட பெருங்குடியில் வந்தவன்

கோவலன். உரைசால் சிறப்பின் அரைசு விழைதிருவின்

பரதர்" (மனையறம் படுத்த காதை 1 - 2) என

இளங்கோவடிகளார் கூறுவது காண்க. ஆகவே,

கோவலன், காவலன் போலவே காட்சி அளிப்பன் ஆதலாலும், கோவலன் மனை மறந்து பல்லாண்டு கழிந்து விட்டமையால், அவன் உருவை, அவன் மனை

குற்றிளையோரும் மறந்துபோக, அவன் கடைவாயிற்

கண் வந்து நிற்கவும், அவர் கண்களுக்குக் கணப்போது

கோவலனாகக் காட்சி அளிக் காது, காவலனாகத்

தோற்றம் அளித்துவிட்டமையால், அவர்கள் "காவலன். போலும் கோவலன் கடையகத்தான்”, "காவலன், போலும் கடைத்தலையான் வந்து, நம் கோவலன், என்றாள் ஒர் குற்றிளையாள்" (கனாத்திறம் உரைத்த

காதை: 65 - 66) எனக் கூற வேண்டிய நிலை நேர்ந்து விட்டது. - -

ஆகவே, மாலை கொண்டு மாதவியோடு உறவு கொண்டது முதல், அவள் பாடிய கானல் வரி கேட்டு, அவளை வெறுத்துக் கைவிட்டுத் திரும்பியதுவரையான இடைப்பட்ட காலத்தில், கோவலன், கண்ணகி வாழும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/99&oldid=560722" இலிருந்து மீள்விக்கப்பட்டது