பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

சுந்தர சண்முகனார்



கூச்சப்பட்டுக் கொண்டு தயங்குவாள் ஆதலின், ஏற்றினர் என்றார்.

திருமண நாளன்றே முதலிரவு நடத்தும் பழக்கம் சில குடும்பங்களில் உண்டு - சில குடும்பங்களில் இல்லை. மணமானதும், மணமக்களைப் பலநாள் காக்க வைத்துப் 'பத்தியம்' பிடிக்கச் செய்யாமல் முதல்நாளே ஒன்று சேர்ப்பது நல்லது என்பர் சிலர். சிலநாள் பழக வைத்து கூச்சம் தெளிந்தபின் இணைப்பது நல்லது என்பர் சிலர். சில மணமக்கள், பெரியோர்கள் நல்ல நாள் பார்த்து ஏற்பாடு செய்வதற்கு முன்பே, அவர்கள் அறியாதபடி நேரடி நடவடிக்கையில் இறங்கிவிடுவதும் உண்டு. சில குடும்பங்களில் முதலிரவுக்கு நல்ல நாள் பார்த்து விருந்து ஓம்பி ஒரு விழாவே நடத்துவது உண்டு.

கோவலன் கண்ணகி திருமணமும் நடைபெற்றது தொடர்பாக ஒரு சிக்கல் உண்டு. ஐயன்ர வைத்து நெருப்பு முட்டிச் சடங்குகள் செய்து திருமணம் நடத்தியதாகச் சிலம்பு சொல்கிறது. இது ஆரிய முறை - தமிழ் முறை இன்னதன்று - ஆரிய முறையை ஒழிக்க வேண்டும் என்கின்றனர் சிலர். சிலப்பதிகாரத்திலேயே சொல்லப் பட்டிருப்பதால் அந்த (ஆரிய) முறையில் செய்யலாம் என்கின்றனர் சிலர்.

ஒவ்வொரு குடும்பத்தில் ஒவ்வொரு பழக்கம் இருக்கலாம். சிலப்பதிகாரத்தில் சொல்லியிருப்பதனால், தமிழர்கள் அனைவரும் அந்தக் காலத்தில் ஆரிய முறையைப் பின்பற்றினர் என்று கூறமுடியாது. 1960-ஆம் ஆண்டு, பெரியார் மாவட்டத்திலுள்ள எலுகான்வலசு என்னும் ஊரில் ப. சாமியப்பன் என்பவருக்கு யான் (சு.ச.) தலைமை தாங்கித் திருமணம் செய்து வைத்தேன். பழைய பழக்கம் எப்படி என்று அங்கு வினவியபோது, எங்கள் பக்கத்தில் மரபு வழி - மரபு வழியாகப் (பரம்பரையாகப்) பார்ப்பனரை வைத்துதி