பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16. உவமை - உருவகங்கள்

சிலப்பதிகாரத்தில் எத்தனையோ உவமைகளும் உருவகங்களும் வந்துள்ளன. தாமரை போன்றமுகம் என்னும் பொருளில் தாமரை முகம் என்று சொல்லின் அது உவமை. முகமாகிய - அதாவது முகம் என்னும் தாமரை என்னும் பொருளில் முகத்தாமரை என்று சொல்லின் அது உருவகம். சில காண்பாம்:

உவமைகள்

மனையறம் படுத்த காதை அமளிமிசை கோவலனும் கண்ணகியும் ஞாயிறும் திங்களும் ஒன்றாயிருந்தது போன்ற காட்சியினராய் அமர்ந்திருந்தனராம்:

"முதிர்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
கதிர் ஒருங்கிருந்த காட்சி போல"
(2:30, 31)

'கதிர் ஒருங்கிருந்த' என்பதைக் கொண்டு இரண்டு கதிர்கள் என்பது பெறப்படும். இப்போது பெண்கள் பெரிய உரிமை எடுத்துக் கொள்ளினும், தொடக்கத்தில் கோவலன் செய்த திருவிளையாடல்களையும் கண்ணகி அடக்கமாயிருந்ததை யும் நோக்குங்கால், கோ வ ல னை ஞாயிறாகவும் கண்ணகியைத் திங்களாகவும் கூறலாம். கதிர்கள் இரண்டும் ஒன்றாயிருத்தல் இல்லை யாதலின், இது இல்பொருள் உவமை எனப்படும். வடமொழியில் அபூத உவமை என்பர்.

இந்தக் காதையின் இறுதி வெண்பாவில் இரண்டு உவமைகள் உரைக்கப்பட்டுள்ளன. இருவரும் காமனும் அவன் மனைவி இரதியும் போல் தோற்றத்தில் காணப்