பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

137


பட்டனராம். ஆண் பாம்பும் பெண் பாம்பும் ஒன்றோடு ஒன்று முறுக்கிக் கொண்டு இன்பம் துய்ப்பதுபோல், இருவரும் தம் உடல்களைப் பின்னிப் பிணைத்துக் கொண்டு பிரிக்க முடியாதபடி இன்பத்தில் மிதந்தனராம்.

"தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என ஒருவார்
காமர் மனைவி யெனக் கைகலந்து..."

என்பது பாடல் பகுதி. பாம்புகளின் உவமை மிக்க பொருள் பெறுமானம் உடையது.

அந்திமாலைச் சிறப்புச் செய்காதை, தங்கள் பேரரசன் போய் விட்டபோது, குடிகளை வருத்தி வரிவாங்கும் கொடிய குறுநிலமன்னரைப் போல், ஞாயிறு மறைந்ததும் அந்தி மாலை வந்ததாம்:

"அரைசுகொடுத்து அலம்வரும் அல்லல் காலைக்
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளோடு ஒருதிறம் பற்றி
வலம்படு தானை மன்னர் இல்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் (4:8-12)
மல்லல் முதுரர் மாலைவக் திறுத்தென" (4:20)

ஞாயிறு பேரரசன் போன்றது. அந்திமாலை குறு நில மன்னர் போன்றது. ஞாயிறு போனதும் மாலை வந்தது.

கதையின் இறுதி வெண்பா வேந்தனின் குடை தன் குடி மக்கட்குக் குளிர்ச்சியும் பகைவர்க்கு வெப்பமும் தருவது போல, இரவில் திங்கள் தோன்றி மாதவிக்கு இன்பமும் கண்ணகிக்குத் துன்பமும் தந்தது.

"கூடினார்பால் கிழலாய்க் கூடார்பால் வெய்யதாய்க்
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வானூர் மதிவிரிந்து
போதவிழ்க்கும் கங்குல் பொழுது"