பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

சுந்தர சண்முகனார்


பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை
பார்தொழு தேற்றும் பத்தினி யாதலின்
ஆர்புனை சென்னி அரசர்க்கு அளித்து,
செங்கோல் வளைய உயிர் வாழாமை
தென்புலம் காவல் மன்னவற்கு அளித்து,
வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை
வடதிசை மருங்கின் மன்னவர் அறியக்

குடதிசை வாழும் கொற்றவற்கு அளித்து”
(207-217)

என்பது பாடல் பகுதி. ஆர் புனை சென்னி அரசர் = ஆத்தி மாலை சூடிய சோழர், தென்புலம் காவல் மன்னன் = தமிழ் நாட்டின் தென் பகுதியாகிய பாண்டிய நாட்டைக் காக்கும் பாண்டிய மன்னன். குடதிசை வாழும் கொற்றவன் = தமிழ் நாட்டின் மேற்குப் பகுதியை ஆளும் சேரன்செங்குட்டுவன். இந்த இடத்திலும் முப்பெரு வேந்தர்களையும் இணைத்துக் காட்டியுள்ளார் அடிகள்.

வாழ்த்துக் காதை

வாழ்த்து

வாழ்த்துக் காதையில் மகளிர் மாறி மாறி மூவேந்தரைப் பற்றிப் பாடியுள்ளார், ‘வாழ்த்து’ என்னும் தலைப்பில்,

“வாழியரோ வாழி வருபுனல் நீர் வையை
சூழு மதுரையார் கோமான்தன் தொன்குலமே.”
(13)

“வாழியரோ வாழி வருபுனல் நீர்த் தண்பொருநை
சூழ்தரும் வஞ்சியர் கோமான் தன் தொல் குலமே”
(14)

“காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்

பூவிரி கூந்தல் புகார்” (15)