பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

சுந்தர சண்முகனார்



உன் தந்தையர் கண்கள் (துளைகள்) பொருந்திய வலையால் உயிர் கொல்வர். நீ நின் கண்ணாகிய வலையால் உயிர் கொல்கிறாய். (18)

உன் குடும்பத்தார் படகால் உயிர் கொல்வர்; நீ நின் புருவத்தால் உயிர் கொல்கிறாய். (19)

7. கொடிய-வெய்ய

பவள உலக்கையால் முத்தம் குற்றுபவளின் கண்கள் குவளை மலர்கள் அல்ல; கொடிய - கொடிய (20)

அன்னம் தன் நடையைப் பார்த்து நடக்கும்படி நடப்பவளின் கண்கள் கூற்றம் - கூற்றம் (21)

நீல மலர்களைக் கொண்டு மீன் உணங்கலைத் தின்ன வரும் பறவைகளை ஒட்டுபவளுடைய கண்கள், வேல்கள் அல்ல - அவ்வேலினும் வெய்ய வெய்ய (22)

8. சேரல் மட அன்னம்

மட அன்னமே! அவள் நடையை நீ ஒவ்வாய். அவள் பின் செல்லாதே - தோற்றுவிடுவாய் - பாடல்.

சேரல்மட அன்னம் சேரல் கடைஒவ்வாய்
சேரல்மட அன்னம் சேரல் நடைஒவ்வாய்
ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல்மட அன்னம் சேரல் நடைஒவ்வாய்
(23)

இவ்வாறு கோவலன் வேறு பெண்ணொருத்தி மீது மனம் நாடியவன் போன்ற குறிப்பமைத்துச் செயற்கை யாகப் பாடினான். இதைக் கேட்ட மாதவி தானும் செயற்கையாக வேறொருவன் மேல் குறிப்பமைத்து யாழ் இசையும் தன் குரல் இசையும் ஒன்றப் பாடலானாள். (24)

வண்டு ஒலிக்க, பூ ஆடை போர்த்து, கயற் கண்ணால் விழித்து அசைந்து நடந்தாய் காவேரியே. நீ இவ்வாறு