பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

165


உலக இலக்கியங்களுள் ஏதாவது ஒன்றில் இவ்வளவு சுவையான பகுதி இருக்குமா என்று ஐயுறும் அளவில் இந்தக் கானல் வரி உள்ளது. இளங்கோ அடிகள் இத்தகைய கற்பனையை எங்கு யாரிடம் கற்றாரோ? நம் தமிழ்க் கழக இலக்கியங்களிலிருந்து பிழிந்து எடுத்த சாறாக இருக்குமோ இது! தமிழுக்கே உரியது அகப்பொருள் இலக்கணம் - என்று சொல்கிறார்களே - அதுதானோ இது. எவர் பெயரையும் குறிப்பிடாமல் நிகழ்ச்சியைச் சொல்வது அகப்பொருள்.

"மக்கள் நுதலிய அகனைந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்" (57)

என்பது தொல்காப்பியம் - அகத்திணையியல் நூற்பா. இதில் குறிப்பிட்ட எவர் பெயரையும் கூறாமையால், இதனை முழுக்க முழுக்க நூற்றுக்கு நூறு அகத்திணைப் பகுதி எனலாம். சிலப்பதிகாரம் புறப்பொருளேயாயினும் கானல் வரி மட்டும் அகப்பொருள் அமைந்தது.

கானல் வரியில் பல அகத்துறைகள் உள்ளன. அவை:தோழி தலைமகனிடம் வரைவு கடாயது. கையுறை மறுத்தல். குறியிடத்துப் போன பாங்கன் தலைமகளின் மிக்க காதலைக் குறிப்பால் அறிந்து உரைத்தது. கழறியதற்கு எதிர் மறுப்பு. தனியாக இடத்தெதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன் கூறியது. பாங்கன் கேட்பத் தலைமகன் உற்றது உரைத்தல். புணர்ச்சி நீடிக்க இடந்தலைப் பாட்டில் புணர்தலுறுவான் கூறியது. குறியிடத்துக் கண்ட பாங்கன் சொல்லியது. காமம் சாலா இளமையோள் வயின் ஏமம் சாலா இடும்பை எய்தியோன் சொல்லியது. தோழியிற் கூட்டம் கூடிப் பின்பு வந்து வரைவேன் என்றாற்குத் தோழி கூறியது. குறை நயப்பித்தது. காமம் மிக்க கழிபடர் கிளவியாகத் தலைவி கூறியது. அலர் அறிவுறுத்தி வரைவு கடாவியது. பொழுது கண்டு ஆற்றாளாகிய தலைவி