பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

சுந்தர சண்முகனார்



தோழிக்கு உரைத்தது. ஆற்றுவித்தற் பொருட்டுத் தோழி இயற்பழிக்கத் தலைமகள் இயற்பட மொழிந்தது. மாலைப் பொழுது கண்டு தலைவி கூறியது. வரைவு நீட்டித்த இடத்துத் தலைகன் சிறைப்புறத்தா னாகக் கூறியது,

இவ்வாறு பலதுறைகள் அமைத்துச் சுவையுறப் பாடப் பெற்றது கானல் வரி.

வரிப்பாட்டின் இலக்கணம் தொடர்பாக உள்ளவற்றில் சுவையான ஒன்றே ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடலாம். அது, ஒரே அடி. இருமுறை மடக்கி வருதலாகும். அதாவது, இரண்டாம் அடி மூன்றாம் அடி.யாக மடங்கி வரும். அவை:


“கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி
கங்கை தன்ளைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல்”
(2)

“கள்னிதன்லனப் புணர்ந்தாலும் புலவாய்வாழி காவேரி
கள்ளி தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல்”
(3)

“விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி
விழவர் ஓதை சிறந்தார்ப்பு நடந்த வெல்லாம்”
(4)

“தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்”
(20)

“அள்ளம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்”
(21)

“புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்”
(22)

“கருங் கயற்கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி
கருங் கயற்கண் விழித்தொல்கி
நடந்த வெல்லாம்”
(25)

“காமர் மாலை அருககைய நடந்தாய் வாழி காவேரி
காமர் மாலை அருகசைய நடந்த வெல்லாம்”
(26)