பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

சுந்தர சண்முகனார்



பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்’ என்னும் பகுதியால் அறியலாம். இதுவும் முன்னோட்டச் சுவையே அண்மைக் காலத்தில் மதுரையும் பாண்டியனும் படவிருக்கும் பாடு மிகவும் பெரியதல்லவா?

மாடலன்

மாடலன் என்னும் அந்தணன், கொலைக் களக்காதைக்கு முன் காதையாகிய அடைக்கலக் காதையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளான். இதுவரையும் எந்தப் பெருமையான செயலையும் செய்யாத கோவலனைச் சிறந்த கதைத்தலைவனாக (Hero) ஆக்க, இளங்கோ பாடலனைப் பயன்படுத்திக்கொண்டுள்ளார். கோவலனின் பழைய வெற்றிச் செயலையும் வள்ளன்மையையும் இரக்கத்தையும் இன்ன பிற சிறப்புச் செயல்களையும் குறிப்பிட்டு மாடலன் கோவலனைப் பாராட்டுகிறான். இந்தப் பாராட்டுகள் இல்லையெனில், அடுத்த காதையில் கோவலன் இறந்ததும், அவன்மேல் மக்கட்கு (நூல்படிப்பவர்க்கு) இரக்கமும் பரிவும் ஏற்பட முடியாதல்லவா? விளையாட்டில் பந்தைச் சரியான இடத்தில் போடுவது போல், கோவலன் பெருமையைச் சரியான இடம் பார்த்துச் செருகியுள்ளார் இளங்கோ, (கோவலன் சிறப்புகள் வேறு தலைப்பில் கூறப்பட்டுள்ளன.) புறஞ்சேரியை விட்டு நீங்கிக்கண்ணகியுடன் மதுரை நகர்க்குள் சென்றாலேயே காக்கப்படுவீர் - ஆதலின் மதுரைக்கு விரைந்து செல்க எனக் கோவலனைத் தூண்டியனுப்பினான் மாடலன்.

மாதரி

“நாவலந் தண்பொழில் மன்னர்
ஏவல் கேட்பப் பாரரசு ஆண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன்”

என்று ஆய்ச்சியர் குரவையின் தொடக்கத்தில் பாண்டியனை மாதரி புகழ்கின்றாள். அவளே, ஆய்ச்சியர் குரவைக்