பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

சுந்தர சண்முகனார்


யார் என்று வினவினர். இவர்கள் என் மத்தள் (பிள்ளைகள்) என்றார் கவுந்தி, உடனே அவன்?'தின் மக்களாகிய இந்த அண்ணனும் தங்கையும் கணவனும் மனைவியுமாகக் காட்சி தரலாமா? - எனக் கிண்டலாகக் கேட்டனர். இவ்வாறு கேட்டதற்கு உரிய காரணப் பொருத்தத்தையும் குறிப்பாக இளங்கோவின் பாடல் பகுதியால் அறிய முடிகிறது. கவுந்தியோ துறவி. இவர்கள் இருவருமோ மன்மதனும் அவன் மனைவி இரதியும் போன்று அழகாகவும் இணைந்தும் காணப்பட்டனர். துறவிக்கும் இந்த இளைய அழகர்கட்கும் என்ன தொடர்பு? - என்றெல்லாம் எண்ணிக் கிண்டல் செய்தாராம். வெற்று வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்தால் போதுமே! இயற்கையிலேயே பயனில் சொல் பேசும் இந்தத் தீயோருக்கு, இந்தச் சூழ்நிலை மேலும் இழிமொழி கூற வாய்ப்பாயிற்று. பாடல் பகுதி:

"போதுசூழ் கிடக்கையோர் பூம்பொழில் இருந்துழி
வம்ப்ப் பரத்தை வறுமொழி யாளனொடு
கொங்கலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர்,
காமனும் தேவியும் போலும் ஈங்கிவர்
ஆரெனக் கேட்டீங்கு அறிகுவம் என்றே,
நோற்றுணல் யாக்கை நொசிதவத் தீருடன்
ஆற்றுவழிப் பட்டோர் ஆரென வினவ, என்
மக்கள் காணிர் மானிட யாக்கையர்
பக்கம் நீங்குமின் பரிபுலம்பினர் என,
உடன்வயிற் றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ கற்றறிந்தீர் என" (218-228)

இந்தப் பகுதியால், தமிழர்களுள் அண்ணன் தங்கை முறையினர் கணவன்-மனைவியாக மணந்து கொள்வதில்லை என்ற உயரிய நாகரிகக் கோட்பாடு புலனாகிறது. வேறு இடத்தில், அண்ணனும் தங்கையும் மணந்து கொள்வது