பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

193


அவ்வாறு செய்துவிடின், அதற்கு உய்வழி - கழுவாய் பிராயச்சித்தம் என்னவெனில், மீண்டும் அத்தகைய செயலைச் செய்யாதிருப்பதுதான் - என்று திருவள்ளுவர் வழி சொல்லிக் கொடுத்துள்ளார்:

“எற்றென்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று” (655)

என்பது குறள்.

குடிகாரர்களும் சூதாடிகளும் தேவடியாள் தோழர்களும் தாம் கெட்டாலும், மீண்டும் மீண்டும் பழைய பழக்கத்தை விடாமல் தொடரவே முயல்வர். ஆனால், கோவலன், வள்ளுவர் கூறியுள்ள படி, மீண்டும் பழைய தவறைச் செய்யாமல் உறுதியாகத் திருந்திப் பழைய தவறுக்குக் கழுவாய் தேடிக் கொண்டுள்ளன்.

அடைக்கலக் காதை

பணிவுடமை

பெரியோரைக் கண்டால் செருக்குற்று இராமல் தாழ்ந்து வணங்குவது உயரிய பண்புகளுள் ஒன்று. அவ்வாறே, மாடலன் என்னும் மறையவனைச் சோலையில் கண்டபோது, கோவலன் அருகில் சென்று மாடலனின் அடிகளை வணங்கினான்: -

“மாமறை முதல்வன் மாடலன் என்போன்...(12)
கவுந்தி இடவயின் புகுந்தோன் தன்னைக் (18)

கோவலன் சென்று சேவடி வணங்க” (29)

என்பதனால், கோவலனின் பணிவு தெரிகிறது.

பெயர் சூட்டு விழா

கோவலன் மாதவியுடன் குடியும் குடித்தனமுமாய் இருக்கும் அளவுக்கு வந்து விட்டான். அதாவது, அவனுக்கு