பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

197


எண்நான்கு இரட்டி (32x2=64) அறுபத்து நான்கு. ஆய கலைகள் அறுபத்து நான்கும் வல்ல கணிகையர் இருக்கும் தெருக்கள் - என்பது கருத்து. எனவே, மணிமேகலையின் பெயர் சூட்டு விழாவில் ஆயிரம் கணிகையர் (மிக்க பலர்) இருந்ததில் வியப்பில்லை.

இங்கே, தற்செயலான வாய்ப்பாக நேர்ந்த ஒரு கருத்தைச் சொல்லாமல் விடுவதற்கு இல்லை. கணிகையர் ஒருவரோடு ஒருவர் பகைகொள்வதே இயற்கையாயிருக்க, ஆயிரவர் எங்ஙனம் ஒன்று சேர்ந்தனர். ஈண்டு, நீதி வெண்பா என்னும் ஒரு நூலில் உள்ள ஒரு பாடலின் கருத்து நினைவைத் தூண்டுகிறது. கணிகையரும் நாய்களும் மருத்துவரும் பார்ப்பனரும் கோழிகளும் ஒருவரை ஒருவர் - ஒன்றை ஒன்று கண்டவுடனே எந்தக் காரணமும் இன்றிப் பகைகொள்வது உண்டாம். இதற்குக் காரணம் பிறவிக் குணமேயாம். பாடல்:

“வேசியரும் நாயும் விதிநூல் வயித்தியரும்
பூசுரரும் கோழியும் பொன்னனையாய் - பேசிலொரு
காரணங்தான் இன்றியே கண்டவுடனே பகையாம்

காரணங்தான் அப்பிறப்பே காண்” (65)

நாய்களும் கோழிகளும் போரிடுவது அறிந்ததே. வேசியர் = கணிகையர். பூசரர் = பார்ப்பனர். கணிகையரும் மருத்துவரும் பார்ப்பனரும் (புரோகிதரும்) தம்வாடிக்கையை மற்றவர் பிடித்துக் கொண்டதாகப் பகை கொள்வர். இங்கே, இதுபோன்றதெனச் சொல்லப்படும் இந்தக் காலக் கருத்து ஒன்று நினைவுக்கு வருகிறது. அதாவது. “தமிழ்ப் புலவர்கள் இருவர் இருக்கும் இடத்தில் போர்மூளும்; அதனால் பக்கத்தில் ஒரு போலீசுகாரர் இருக்கவேண்டும்” எனப் பெரியார் ஈ. வெ. இராமசாமியவர்கள் கூறியதாகச் சொல்லிக்கொண்டு சிலர் தமிழ்ப் புலவர்களைத் தாழ்த்துகின்றனர். ஆனால், நீதி வெண்பா