பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

சுந்தர சண்முகனார்


நூலில் உள்ள பட்டியலில் தமிழ்ப்புலவர்கள் இல்லை என்பதையும், எத்தரத்தினரும் - எத்தொழிலினரும் கருத்து வேற்றுமை கொள்வதுண்டு. அது போர் ஆகாது என்பதையும், தமிழ்ப் புலவர்களைத் தாழ்த்துபவர்கள் நினைவில் கொள்ளல் வேண்டும்.

கண்டவுடனேயே பகைகொள்ளும் ஆயிரம் கணிகையர்கள் எவ்வாறு ஒன்று கூடினர் என எண்ணத் தோன்றும். இதிலிருந்து உய்த்துணர்ந்து கொள்ளக் கூடியது. மாதவி கணிகையர் குழுவின் தலைவியாய் இருந்திருக்கவேண்டும், அவள் அரசனால் சிறப்பிக்கப்பட்டவள் ஆயிற்றே. மற்றும், மிகப் பெரிய செல்வனும் தேவடியாள் தோழனுமாகிய கோவலனைக் குளிரப் பண்ணி வைக்க வேண்டும் - என்பது குறிப்பாய்ப் புலனாகலாம். இக்கால நூலாசிரியர் ஒருவர், மாதவியின் தோழியாகிய வயந்த மாலை என்பவளுடனும் கோவலன் உடலுறவு கொண்டிருக்கக் கூடும் என்று எழுதியுள்ளார். பாதை மாறிச் சென்றதால், இந்தப் பழிச் சொற்களை ஏற்க வேண்டி வந்தது கோவலனின் தலைவிதியோ?

கருணை மறவன்

மணிமேகலைக்குப் பெயர் சூட்டு விழா நடத்திய ஞான்று, கோவலன் மாதவியுடன் சேர்ந்து கொண்டு சிவந்த கையால் சிவந்த பொன்மழை பொழிந்தானாம். மழைபோல் பொன்னைப் பொழிவதற்குப் பொன் ஏது? தன் வீட்டிலிருந்து முதல் முதலாக மாதவி வீட்டிற்கு வரும்போதே ஏராளமான செல்வத்தை எடுத்துக் கொண்டு வந்துவிட்டானா? அல்லது, இடையிடையே தன் வீட்டிற்குச் சென்று எடுத்து வந்திருப்பானா? அவ்வாறு போய்ப் போய் எடுத்து வந்திருந்தால் பெற்றோர் கண்டித்திருக்க மாட்டார்களா? இவன் பெயரில் வெளியில் வணிகம் தொடர்பான செல்வங்கள் இருந்திருக்கலாம். வணிக