பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

சுந்தர சண்முகனார்


இந்து மதம் என்னும் குட்டையில் ஊறிய மட்டைகளே. இந்து மதத்திலிருந்தே இவை தோன்றின. இவர்கட்கும் இராமாயணமும் பாரதமும் உண்டு. நன்னூல் எழுதிய சமணராகிய பவணந்தி முனிவர், எழுத்ததிகாரத்தின் தொடக்கத்தில்,

“பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
நான்முகன் தொழுதுகன்கு இயம்புவன் எழுத்தே”

என நான் முகனையும் (பிரமனையும்), சொல்லதிகாரத்தின் தொடக்கத்தில்,

“முச்சகம் கிழற்றும் முழுமதி முக்குடை

அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே”

எனத் திருமாலையும் (அச்சுதனையும்) வணங்கியுள்ளார். இவர்கட்கும் நான்முகன், திருமால் முதலியோர் உண்டு. எனவே, கோவலன் திருமால் கோயிலை வணங்கியதைக் கொண்டு, அவன் சமணன் அல்லன் என்று கூறவியலாது.

கோவலனின் இறுதி உருக்கம்

கோவலன் மாதரி வீட்டில் கண்ணகி படைத்த விருந்தை உண்டு அவளுடைய சிலம்புகளுள் ஒன்றைப் பெற்றுக் கொண்டு விற்பதற்காகக் கடைத் தெருவிற்குப் புறப்படு முன் கண்ணகியைத் தழுவிக் கொண்டு, அவளைத் தனியாக விட்டுச் செல்வதற்காக மனம் உருகிக் கண்களில் துளிக்கும் கண்ணீரை மறைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றான். பாடல்:

“கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண் டியான்போய்
மாறி வருவன் மயங்காது ஒழிகெனக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னை
ஒருங்குடன் தழீஇ உழையோர் இல்லா

ஒருதனி கண்டுதன் உள்ளகம் வெதும்பி