பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

227


சாமிஉம் பொறுமையைப் பூமிக் களித்தின்சொல்
     சந்தக் குயிற்கண் இட்டுச்
சகக்கடை வரைப்பெரிய சாமியாம் பெயர்நிறுவித்

     தாணுவடி வெய்தி னீரே”

என்பது பாடல். மதி விளக்கும் திறமைக்கு ஞாயிற்றையும், ஆசானின் அன்புக்குத் தாயின் அன்பையும், மிகுந்த கவிபாடும் ஆற்றலுக்குக் கடலையும், புகழுக்கு (அளவில்) இமய மலையையும், பொறுமைக்கு அகழ்வாரைத் தாங்கும் நிலத்தையும், அவரது இன்சொல்லுக்குக் குயிலையும் உவமையாகக் கூற வந்த பாரதிதாசன், அந்த உவமைகளையே வேறொரு கோணத்தில் நின்று விளக்கியுள்ளார். இந்த முறை ஏறத்தாழ இளங்கோ கையாண்டுள்ள முறை போன்றுள்ளதல்லவா? இனி, மீண்டும் சிலம்புக்கு வருவோம்.

கோவலன் மீண்டும் கண்ணகியின் நலம் பாராட்டுகிறான். கண்ணகியே, உன் சாயலைக் கண்டு வெட்கி மயில் காடேகியது. உன் நடையைக் கண்டு நாணி அன்னம் மலர்ச் செறிவுக்குள் மறைந்து கொண்டது. ஆனால், இரக்கத்திற்கு உரிய கிளி, குழலும் யாழும் அமிழ்தும் கலந்த உன் இனிய பேச்சைக் கேட்டுச் சிறுமையடைந்த தாயினும், உனது பேச்சினிமையைக் கற்றுக் கொள்வதற்காக உன்கையிலேயே உள்ளது-என்று கூறிய கோவலன் மேலும் பாராட்டுகிறான். (53-61-ஆம் அடிகள்)

கண்ணகியே! உனக்கு மங்கல நாண் அணி உள்ளபோது, வேறு அணிகலன்களை உன் தோழியர் ஏன் உனக்கு அணிகின்றனர்? உனக்குச் சில மலர்கள் அணிந்தாலே போதுமே! அங்ஙனமிருக்க, ஏன் பெரிய மாலையைச் சூட்டுகின்றனர்? அந்த மாலைக்கும் இவர்கட்கும் இடையே ஏதாவது தொடர்பு (பேரம்) உண்டா? உன் மார்பகத்தில் தொய்யில் எழுதியதே போதுமே மேலும் முத்து