பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

249


சேயவர் தம்மில் மூத்த திருநாவுக்கரசை, வாழை
மேயபொற் குருத்துக் கொண்டுவா எனவிரைந்து
                                                            விட்டார்
(23)

“வெய்ய வேகத்தால் விழா
     முன்னம் வேகத்தால் எய்திக்
கொய்தஇக் குருத்தைச் சென்று

     கொடுப்பன் என்றோடி வந்தான்” (25)

என்னும் பாடல்களால் அறியலாம். பெரிய புராணத்தில் குருத்து வாழை இலை குறிப்பிடப்பட்டிருப்பது சிலம்போடு ஒப்பு நோக்கத்தக்கது. நிற்க.

கண்ணகியின் மாற்றா உள்ளம்

கோவலன் உணவு கொண்ட பின், கண்ணகி வெற்றிலை பாக்கு மடித்துச் சுருட்டித் தந்தாள். அப்போது, கோவலன், பெற்றோர்க்கும் கண்ணகிக்கும் தான் இழைத்த பிழையைக் கூறி வருந்தினான். யான் உனக்கு ஒரு நலமும் செய்யவில்லை - துன்பமே உண்டாக்கினேன். என் பிழையை மறந்து, மதுரைக்குப் போவோம் - வருக என்று சொன்னதும் வந்து விட்டாயே கண்ணகி! - என்று கோவலன் வருத்தம் தெரிவித்ததும், கண்ணகி கூறியதாவது:-

நீங்கள் என்னைப் பிரிந்திருந்த காலத்தில், எனக்கு எந்த இன்பமும் கிடைக்காததற்காக நான் வருந்தவில்லை. அறவோர், அந்தணர், துறவோர், விருந்தினர் இவர்களை உம்முடன் இருந்து போற்ற முடியாது போனமைக்கே வருந்தினேன். உம் பெற்றோர்களின் முன்னே, யான் எனது வெறுப்பைச் சிறிதும் வெளிப்படுத்தவில்லை. நம் மகன் விட்டுச் சென்றதால் கண்ணகி வருந்துகிறாளே என்று நும் பெற்றோர் எண்ணி, என்னிடம் அன்பு உள்ளத்தோடு அருள் மொழி கூறி ஆறுதல் செய்து வந்தனர். அவர்களை மகிழ்விப்பதற்காக யான் பொய்ச் சிரிப்பு சிரிப்பேன், அந்தச்