பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

263


என்பது குறள் பா. தக்கவர்கள் நேர்ந்து நிரவி இனிமையாகவும் திறமையாகவும் பேசி அறிவுறுத்துவாராயின், மக்கள் ஏற்றுக்கொண்டு செயல் புரிவர். சிலம்பில் ஊர் காண் காதையில், கவுந்தி கவர்ச்சியாகப் பேசிக் கோவலனுக்கு ஆறுதல் உண்டாக்கிய செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவலன் கவுந்தியை வணங்கிச் சொல்கிறான். யான் நெறிமுறை தவறி ஒழுகிச் செல்வம் இழந்து, கண்ணகி துயருற்று வருந்தும்படி அறியாத புது ஊருக்கு அழைத்து வந்து விட்டேன். யான் மதுரை மாநகருக்குள் சென்று என் இனத்தவரைக் கண்டு எதிர்காலத்தில் செய்ய வேண்டியதற்கு உரிய ஏற்பாடுகளை ஆயத்தப்படுத்தி வரும்வரை கண்ணகி உங்கள் திருவடிப் பாதுகாப்பில் இருப்பாளாக - அதனால் உங்கட்குத் துன்பம் ஒன்றும் இருக்காதே - என்று நொந்து வினவினான். அப்போது கவுந்தி பின்வருமாறு அவனுக்கு ஆறுதல் கூறித் தேற்றலாயினார்:

கோவலா! எல்லாம் ஊழ்வினைப் பயன். வாய் பறையாகவும் நாக்கு பறையடிக்கும் குறுந்தடியாகவும் கொண்டு பெரியோர்கள் எவ்வளவோ அறிவுரைகளும் அறவுரைகளும் கூறியுள்ளனர். கற்றறிந்த நல்லோர் நல்வினையே புரிவர். வாழ்க்கையில் வழுக்கியோரே பிரிதல் துன்பம், புணர்தல் துன்பம், மன்மதன் செய்யும் துன்பம் முதலியவற்றால் வருந்துவர். எல்லாம் வினைப் பயனே. எனவே நடந்து போனதற்கு வருந்தலாமா? இன்னும் கேள்! உன்னைப்போல் வருந்தியவர் மிகப் பலராவார். இராமன் காட்டில் சீதையைப் பிரிந்து தேடி வருந்தினான். நளன் சூதாடித் தோற்று மனைவியோடு காடேகி, இரவில் அவளைக் காட்டிலேயே விட்டுப் பிரிந்து சென்று விட்டான். இவர்கள் இருவரும் மனைவியரைப் பிரிந்து வருந்தினர். நீயோ மனைவியைப் பிரியாமல் இங்கே இருக்கிறாய். மனைவியைப் பிரிந்து வருந்திய இராமனையும் நளனையும் நோக்க, மனைவியோ-