பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

சுந்தர சண்முகனார்


இவ்வாறாகச் சில காரணங்கள் கூறி மாதவியை நல்ல குலத்தவளாக உயர்த்துகின்றனர்.

மாதவி பரத்தையர் குலத்தவள் என்னும் கொள்கையினர் தம் கொள்கைக்கு அரணாக வலியுறுத்து அவை:

‘பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை’ என்பது புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்திரன் அவையில் அகத்தியர் முன்னிலையில் உருப்பசி (ஊர்வசி) நடனம் ஆடுகையில், அவளும் இந்திரன் மகனாகிய சயந்தனும் ஒருவர்க்கொருவர் காமக் குறிப்போடு நோக்கிக் கொண்டனராம். அதனால், ஆடல் - பாடல் - இயங்கள் எல்லாம் நெறிதவறித் திரிந்தனவாம். இதனையறிந்த அகத்தியர் முனிவு கொண்டு மண்ணுலகில் சென்று பிறக்கும் படி உருப்பசிக்குக் கெடுமொழி (சாபம்) இட்டாராம். உருப்பசி மாதவி என்னும் பெயருடன் மண்ணுலகில் வந்து பிறந்தாளாம். அந்த மாதவியின் மரபில் இந்த மாதவி வந்தவளாம். அதனால் தான், ‘பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை’ என்று இளங்கோ மாதவியைக் குறிப்பிட்டுள்ளாராம். இந்தப் புராணக் கதையை நம்ப முடியுமா? தெருக் கூத்துக் கதையின் படி நோக்கின் மாதவியின் நிலை நன்கு புரியும்.

மாதவியாக வந்து பிறந்த உருப்பசியின் தராதரம் யோக்கியதை என்ன? இந்திரன் அவையில் நடனம் ஆடியபோது, தன்னைப் பார்த்துக் கண்ணடித்த சயந்தனை நோக்கிப் பதிலுக்குக் கண்ணடித்தவள் தானே? விசுவாமித்திரர் போன்றோரின் தவத்தைக் கலைத்துக் காம வலையில் சிக்க வைக்க உருப்பசி, மேனகை போன்றோர் இந்திரனால் அனுப்பப்பட்டவர்கள்தாமே? இதனால், உருப்பசியும் மேனகையும் பொதுச் சொத்து என்பது புரிய