பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

சுந்தர சண்முகனார்


என்பது நூற்பா. இதே கற்பியலில், தலைவனிடமிருந்து தலைவியின் ஊடல் தீர்க்கத் தூதாகப்போகும் வாயில்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாட்டி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப” (52)

என்பது நூற்பா. பரவை நாச்சியாரின் ஊடலை நீக்கச் சுந்தரரிடமிருந்து ஒர் அந்தணர் (சிவன் என்கின்றனர்) ஒரு முறைக்கு இருமுறை தூது போனதாகச் செல்லப்படும் வரலாறு ஈண்டு எண்ணத்தக்கது. (பெரியபுராணம்)

மற்றும் ‘நம்பி அகப்பொருள்’ என்னும் நூலின் அகத்திணையியல் என்னும் பகுதியில் உள்ள ஒரு நூற்பாவும் அதன் பழைய உரையும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன. அதாவது:-

“இளமையும் யாக்கையும் வளமையும் ஏனவும்
நிலையாத் தன்மை நிலையெடுத் துரைத்தலும்
செலவழுங்கு வித்தலும் செலவுடன் படுத்தலும்

பிறவும் எல்லாம் மறையோர்க்கு உரிய ” (100)

இதன் பொருள்: இருவகைப் பாங்கரில் பார்ப்பனப் பாங்கர்க்கு உரியன எல்லாம் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. இளமை முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாம் பார்ப்பனப் பாங்கர்க்கு உரியனவாம் என்றவாறு. பிறவும் என்றதனால் வாயில் வேண்டல் முதலாயினவும் கொள்க. என்பன நூற்பாவும் உரையுமாகும்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குத் தேவந்தி என்னும் பார்ப்பனி தோழியாயிருந்தாள். கோசிகன் என்னும் அந்தணன் மாதவிக்கு அறிமுகமாயிருந்ததால், கோவலனைப் பிரிந்து வருந்திக்கொண்டிருந்த மாதவியைக் காணச்-